ஆசிரியர் குறிப்பு:
மதுரையைச் சேர்ந்தவர். பணிநிமித்தம் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கிறார். பல இணைய இதழ்களில் எழுதிவருகிறார். கத்திக்காரன் என்ற முதல் தொகுப்பின் பின் வரும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
இந்த. கதைகள் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகள் என்ற வரி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அநேகமாக கத்திக்காரன் தொகுப்பில் எழுதப்பட்ட கதைகளுக்குப் பல கதைகள் முந்தைய கதைகளாக இருக்கக்கூடும். ‘அம்மாவின் பதில்கள்’ போன்ற கதைகள் எப்படி இவ்வளவு காலம் காத்திருக்க முடியும்? ரிஷி கர்ப்பம் ராதங்காது என்பது பொய்யா!
அம்மாவின் பதில்கள் கதையை பலரது கோணத்தில் இருந்து பார்க்க முடியும். அடிப்படையில் ஒரு Loserம் ஒரு Winnerம் ஒன்றாக இருக்க முடியாது என்பதே வாழ்க்கையின் தத்துவம்.
புனிதப்படுத்துதல் என்ற பெயரில் மொத்த வாழ்க்கையைப் பலி கொடுக்காது விலகுவது மேல். நந்தினியின் எரிச்சல், அவளால் முடியாததை அம்மா செய்ததாலா? அம்மா பேசிக் கொண்டே இருக்கிறாள், பதிலை எதிர்பாராமலேயே. பின்னால் விடை இருக்கிறது. Edward Munchன் ஓவியத்தில் இருந்து இந்தக் கதையில் பல நுட்பமான விஷயங்கள் வந்து போகின்றன. கடைசி வரிகள் நீங்கள் இதுவரை வாசித்தது எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. What a story!
மனிதர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பது பல கதைகளில் வருகின்றன. மனைவியின் வெற்றியைத் தாங்கமுடியாத கணவன், பணத்தைக் கொடுத்து கைகழுவும் சேட்டு, அதற்குத் தரகு வேலை பார்க்கும் போலிஸ், காதலித்தவளை கர்ப்பமாக்கி ஒளிந்து கொள்பவன், பல வருடங்களாக சொந்தமாகக் கூட இல்லாமல் செய்யும் அன்பை அவமரியாதை செய்வது, நாகரீக உடையணிந்து பத்திரிகையைத் திருடுபவன், வட்டிக்குப் பணம் கொடுத்து தொழிலை முடக்கியவர் என்பது போல் பல மனிதர்களின் கீழ்மைகளும், மேன்மைகளும் கதைகளில் கலந்தே வருகின்றன.
கதையின் கடைசியில் டிவிஸ்ட்டைக் கொடுக்கும் ஓ ஹென்றியின் யுத்தி, அம்மாவின் பதில்கள், ஜென்மக் கணக்கு, ஆரஞ்சு பொம்மை, ஏபிஎன் பெட்டிக்கடை சம்பவம், சவரம் செய்த முகம், செந்தாழை ஆகிய கதைகளில் வருகின்றன. வலிய இது போல் ஒரு திருப்பத்தை. கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியே இல்லாதது போல் அவ்வளவும் இயல்பாக இருக்கின்றன.
அம்மாவின் பதில்கள், ஆரஞ்சு பொம்மை இரண்டுமே குறிப்பாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் Anticlimaxes.
பல கதைகளில் நுட்பம் கூடி வந்திருக்கிறது.
Best among the lot is அம்மாவின் பதில்கள். பையன் காலம் கடந்து தேர்வை மாற்றிக்கொள்ள நினைப்பது,
குமரப்பெருமாள்-துரை இடையேயான உறவு,
ராஜமாணிக்கம் கடைசியில் முகத்தைச் சுழிப்பது, தனலட்சுமியின் மூட நம்பிக்கை, கற்பகம் முத்துக்குமாரிடம் Clean chit வாங்கத் துடிப்பது, எம்டன் கதை, ஒரு பாதி ஓவியம் அம்மா-பெண் உறவை நெருங்கச் செய்வது,
இறந்ததற்கு ஒரு அழுகை இறக்காததற்கு ஒரு அழுகை என்பது போல் பல உதாரணங்களை இந்தக் கதைகளில் சொல்லலாம். பதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. உரையாடல்கள் மூலமே பெரும்பாலான கதைகள் நகர்கின்றன. கதைகளின் அழுத்தத்தை பேச்சின் மூலம் கொண்டு வந்து விடுகிறார். ஸ்ரீதர் நாராயணன் அதிகம் எழுதுபவரில்லை, அதிக வாசகர்களால் படிக்கப்படுபவருமில்லை. அதனால் அவருக்கு ஒரு நட்டமுமில்லை.
பிரதிக்கு:
பதாகை& யாவரும் பப்ளிஷர்ஸ்
90424 61472 / 98416 43380
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 170.
மிக்க நன்றி சரவணன் மாணிக்கவாசகம் 🙏
இது போன்ற, எழுத்தில் நுட்பங்களை அடையாளப்படுத்தும் வாசிப்பு இன்றைய காலகட்டத்தில் உங்களைப்போல் வெகுசிலருக்குத்தான் சித்தித்திருக்கிறது. உங்கள் வாசிப்பு இந்த புத்தகத்திற்கு சித்தித்திருப்பது எனது பாக்கியம் 🙏❤️
LikeLike