ஆசிரியர் குறிப்பு:

கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பன்னிரண்டாவது வயதில் புலம்பெயர்ந்து தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவருகிறார். கவிதை, இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, அரங்கியல் என்று பலகளங்களில் இயங்குபவர். ஆறு கவிதைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை இதுவரை வெளியிட்டுள்ள இவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

அரியாத்தை- வேலப்பணிக்கன் கதையில், மனைவி இறந்து போக, கணவன் உடன்கட்டை ஏறுகிறான். இந்தக் கதையையும் காலனிய ஆதிக்கத்தின் நோக்கத்தையும் ஒப்பிடுதலே முதல் கட்டுரை. சாதிய வேறுபாடுகள், மற்ற சச்சரவுகள் எல்லாம் மறந்து ஒரே குரலாக அவர்களை எதிர்த்திருக்க வேண்டும்.

தலைப்புக் கட்டுரை, தேவதாசி மரபில் வந்த இரு சகோதரிகளை இவர் சந்திப்பது பற்றிய கட்டுரை. தேவதாசி மரபை ஒழித்திருக்கக்கூடாது என்று இரண்டு பெண்கள் பேசியிருக்கும் இன்றைய சூழலில் இது முக்கியமான கட்டுரை. கடைசியில் உண்மை என்று எல்லோருக்கும் பொதுவான ஒன்றே இல்லை. யாருடைய உண்மை என்பதை யார் பார்க்கிறார்கள் என்பதற்கேற்ப விமர்சிக்கப்படுகிறது.

மரபுக்கவிதை Vs புதுக்கவிதை குறித்து ஒரு பார்வை, Somerset Maughamன் புகழ்பெற்ற சிறுகதை குறித்து இவரது கோணம், Great Indian Kitchen குறித்த இவரது விமர்சனம், நடனத்திற்கு இரண்டு கட்டுரைகள், ஓவியம், ஊழிக்கூத்து என்று பரந்துபட்ட விஷயங்களில் இவரது நுணுக்கமான பார்வையை முன்வைக்கிறார். எல்லாவற்றிலும் இவர் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதால் இவருடைய புரிதல் எளிதாகிறது. Great Indian Kitchenல் கணவன் இது கூடத் தெரியலையா என்பதின் எள்ளல் மட்டுமே எனக்குத் தெரிந்தது, உடலுறவு குறித்துத் தெரிகிறது, இது தெரியவில்லையா என்று அர்த்தம் என இவர் எழுதியிருப்பதைப் படித்ததும் அதற்கான சாத்தியக்கூறுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

இவரால் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்ள முடிகிறது. பாரதியின் ஆசைமுகம் மறந்து போச்சே என்ற கவிதைக்கான இவரது Interpretation ஒரு தத்துவமரபில் சேர்கிறது. Great Indian Kitchen, திரைப்படம் குறித்தும், Colonel’s Lady சிறுகதை குறித்தும் எழுதிய கட்டுரைகள் முழுக்கவே பெண்ணியப் பார்வை.( இவை இரண்டிலுமே ஆணியப் பார்வை பார்ப்பதற்கு எந்த Scopeம் இல்லை என்பது வேறு விஷயம்).

பன்னிரண்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. கலை இலக்கியம் குறித்துப் பேசும் கட்டுரைகள். தெளிவான மொழியில் சொல்ல வருவதில் ambiguity வராத வகையில் கவனமாகத் தேர்ந்தெடுத்த சொற்கள். நமது அழகியல் மரபை விட்டு காலனிய ஆதிக்கத்தின் விளைவாக அவர்களது கண்ணாடியை அணிந்து கலை இலக்கியத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம், சாதிய வேறுபாடுகளைப் பெரிதாகக் காட்டி அதைவிடப் பெரிய பிரச்சனைகளை மூடி மறைக்கும் ஆதிக்க சக்திகள் என்பது போன்ற தனித்துவ சிந்தனைகளும் வெளிப்படும் தொகுப்பு.
A writer to watch.

பிரதிக்கு:

யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ. 150.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s