ஞாபகக் கல் – எஸ்.ராமகிருஷ்ணன் :
Karin Slaughterன் Pieces of Herன் கதை மகள் தன் அம்மா தனக்குத் தெரியாத அந்நியள் என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கும் நிகழ்வுடன் தொடங்கும். சொல்லப் போனால் நம் அம்மாவைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியுமா? பதினாறு வயதில் அவள் யார் மீது காதல் கொண்டாள்?
எஸ்.ரா வின் கதை, தற்செயலாக அம்மாவின் தெரியாத பிம்பத்தை அவள் இறப்பிற்குப் பின் அவளது பிள்ளைகள் கண்டுபிடிக்கிறார்கள். அவள் பலவாகவும் இருந்திருக்கிறாள், இவர்களுக்கு அப்பாவிற்கு அடங்கிய அம்மாவாக இருந்திருக்கிறாள். மாயயதார்த்த சாயலோடு Neatly told story. வின்சென்ட் பாதிரி விஷயம் கூட அவர்கள் வேறு விதமாகக் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். “வெளியே என்ன செய்றே” என்று கோபமாகக் கத்தும் அப்பாவும், அவள் எதையோ ரகசியமாகச் செய்து கொண்டிருந்தால் என்று பேசாமல் இருக்கும் அப்பாவும் ஒருவரே என்பதை ஏற்க என் மனம் மறுக்கிறது.
கேளிர் – தன்ராஜ் மணி:
பெண் வழியில் சீக்கிரம் திருமணமாயிருந்தால் நான்காம் தலைமுறையைப் பார்ப்பது சாத்தியமாகி இருக்கிறது. இது இருநூறு வருடங்களுக்குப் பின் பூமிக்கு வருபவன் ஏழு தலைமுறைகளைச் சந்திக்கும் அறிவியல் புனைவுக்கதை. நல்ல கற்பனை ஆனால், இன்னும் உரையாடலில், சம்பவங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
இரண்டு குறுங்கதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன் :
வெறும் சிரிப்பு:
உணர்ச்சி என்பது தான் நம்மையும் ரோபோக்களையும் வித்தியாசப்படுத்துகிறது. சிரிப்பில் உணர்வு இல்லாததைப் பற்றிய கதை இது.
Ishiguroவின் Klara and the Sun ரோபோவுக்கு மனிதர்கள் போல உணர்வு இருப்பதாகக் கற்பனை செய்து எழுதிய நாவல்.
விண் புத்தகம்:
Space reading பற்றிய கதை. Gravityக்கும் புத்தகம் படிப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறதா? விண்வெளியில் வாசிக்கும் புத்தகம் Homesickஐ அதிகப்படுத்துகிறது. தெருவில் விஜி என்று யாரேனும் கூப்பிட்டால் மனது தானாக காலயந்திரத்தில் பயணம் செய்வது போல.