முதுகன்னியின் ராமன் – நோயல் நடேசன்;

Arranged marriagesல் வரும் discovery of each other சற்றே தாமதமாகப் பதினைந்து வருடங்கள் கழித்து நடக்கிறது. மகாலிங்கம் ஒரு வித்தியாசமான மனிதர். அவர் நர்ஸாகப் பணிசெய்கையில் வரும் நிகழ்வு பின்னால் வருவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. Contentment என்பது மிகையில் இல்லை, நெருக்கத்தில் கிடைப்பது என்பதே கதை. வசந்தியின் இடத்தில் வேறுபெண் பதினைந்து வருடத்திற்கு முன்னே மசாஜ் செய்யாது போனேனே என்று வருத்தப்படவும் செய்யலாம். மாறுபட்ட கதைக்கரு.

ஸ்டார்ட் ஆக் ஷன்- மணி.எம்.கே.மணி:

சினிமாவில் ஆரம்பித்த போது இருந்த சிநேகிதம் வளர்ந்த பின்னும் அட்டை போல் ஒட்டிக் கொண்டு வந்தால் யாருக்குத் தான் பிடிக்கும்! இடையில் பிரகாஷ் வேறு இருக்கிறான். மணியின் கதைகள் எடிட் செய்யப்பட்டே வருவதால் அநாவசிய விளக்கங்கள் இருக்காது. கொரானா சாவு, Parasite போல் வாழ்க்கையைக் கழிக்கும் பிறவிகள் என்று திரைவாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கதைக்கு அசத்தலான ending.

ஒராங்குட்டான் – மெஹர்- தமிழில் பொருநை க.மாரியப்பன்

Office Bullying தான் கதையே. ஐந்து பேர் சேர்ந்து கொண்டு புதிதாக வந்த ஒருவரைக் குறிவைப்பது. பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் சொல்லாதது கதையின் கூடுதல் சுவாரசியம்.

தனிமைக்குள் நீந்தும் ஓங்கில்- பொ.கருணாகரமூர்த்தி:

Modern சின்ட்ரெல்லா கதை. இயல்பாக எந்தச் சிடுக்குமில்லாமல் விரையும் கதை.
எப்போதுமே எதிர்பார்ப்பு குறைவாக இருக்கையில் கிடைப்பது எல்லாமே லாபம் தான்.

துணை – சாந்தி மாரியப்பன்:

பதினைந்து, பதினாறு வயதுப் பெண்ணுடன் தனியே ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்ட பெண்ணின் கதை. எந்த இடத்திலும் இயல்பை விட்டு விலகாமல் நன்றாக வந்திருக்கிறது. வெகு சில கதைகளையே இதற்கு முன் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுத வேண்டும்.

அல்லி வளாகம் – பி.என்.எஸ். பாண்டியன்:

ஆடு புலி ஆட்டத்தில் ஆரம்பிக்கும் கதை படு வேகமெடுத்து கொலுசுச் சத்தம் கேட்பதில் முடிகிறது. அல்லி என்றால் அதிர்ஷ்டம். அல்லி போல் எத்தனையோ பெண்கள். முடிவுகள் மட்டுமே மாறுகின்றன. நிதர்சனத்தை ஒட்டியே நடைபெறும் கதை. இந்தக் கதையை பள்ளி மாணவிகளின் பாடத்தில் சேர்க்கலாம்.

மறுப்பு- .. அம்பிகாவர்ஷினி:

பெண்கள் நகை வாங்க எடுக்கும் Permutations and combinations தான் மொத்தக் கதை. பெண்களுக்கு மோதிரம் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது செருப்பின் அளவு பார்ப்பதைப் போலில்லை இல்லையா? இயல்பாகச் சொல்லப்பட்ட கதை.

வழிச்சேரல் – மயிலன் ஜி சின்னப்பன்:

வங்கியில் ஒரு அதிகாரி இருந்தார். அவர் Scale IVல் இருக்கும் பொழுது Scale IIவில் யாரேனும் மிகவும் Bright ஆக இருந்தால் அவர்களை Scale IIIக்கு வரவிடாமல் அவர்கள் பெயரை எப்படி கெடுக்க வேண்டுமோ அப்படிக் கெடுப்பார். இந்தக் கதையைப் படித்ததும் அவர் நினைவு வந்தது. கார்ப்பரேட்டில் யார் மிகவும் தேவையோ அவரது குற்றங்கள் உடனே மன்னிக்கப்படும், மீரா போன்ற பெண்கள் பாதுகாப்புணர்ச்சி குறைவாக உள்ளவர்கள், ஏனென்றால் அவர்களது ஆண் துரோகம் செய்வது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது, அடுத்து கதைசொல்லிக்கு Dilemma என்பதே இல்லை.
A bird in the hand is worth two in the bush. எதற்காக எப்போதுமே பார்க்காத முபீன் குறித்துக் கவலைப்பட வேண்டும். மயிலனின் கதைகள் அடுத்து வர இருக்கும் அவர் தொகுப்பிற்கான காத்திருப்பின் ஆவலை அதிகப்படுத்துகின்றன.

One thought on “அகநாழிகை- அக்-டிசம்பர் 2022-சிறுகதைகள்:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s