Oyamada முந்தைய இரண்டு குறுநாவல்கள் மூலம் பலத்த கவனத்தைப் பெற்றிருக்கிறார். The Hole மற்றும் The Factory இரண்டுமே பல விருதுகளைப் பெற்ற நாவல்கள். David Boyd இந்த நூலை மட்டுமல்ல, இவருடைய முந்தைய இரண்டு நாவல்களையும் மொழிபெயர்த்தவர்.

ஜப்பானில் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் பிறப்பது ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே போகிறது. சென்ற வருடத்தில் பல எழுத்தாளர்கள் Motherhoodஐப் பற்றிய கதைகளை எழுதி இருக்கின்றனர். இந்த நாவலும் Motherhood பற்றியது ஆனால் ஒரு ஆணின் பார்வையில் நகரும் கதை.

மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த நாவல் மூன்று சிறுகதைகளாக ஜப்பானில் வெளியாகியது. இரண்டு நண்பர்கள், இரவு உணவு, குழந்தை பிறப்பு இவை மூன்றும், இந்த மூன்று பாகங்களுக்கும் பொதுவானவை, இவற்றை இணைப்பவை.
முதல் பாகத்தில் மீன்கள் குட்டி போடுவது, மூன்றாவது நண்பனின் இருபது வயதுக்கும் குறைந்த மனைவி (ஆண்கள் நாற்பதுகளில் இருப்பவர்கள்) குழந்தை பெற்று ஒரு மாதத்தில் வீட்டிலும், வெளியிலும் ஓடியாடி வேலை செய்வது. இரண்டாவது பாகத்தில் அம்மா Weasel பற்றிய கதை. மூன்றாவது மூன்று மாதக் குழந்தையைப் பார்க்கச் செல்கையில் நடப்பது.

நாவலில், பெண்கள் குழந்தை வேண்டுமென்று வெகுவாக விரும்புகிறார்கள். ஆண்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தாலும் தந்தைமை (Fatherhood) அவர்களை மாற்றுகிறது. Diaperஐ மாற்றத் தொடங்குகிறார்கள். பெண்கள் அழகு, சமையல், இளமை இவற்றினால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் அவர்கள் பதவி, பணம் இவற்றினால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால் Fertility என்பது கேள்விக்குரியதாகும் பொழுது………..

Sperm Testன் Resultஐ மனைவி ஏன் சொல்வதில்லை, பக்கத்து வீட்டு முதியவள் மூலமாக அவன் ஏன் முதல்முறையாகக் கேள்விப்பட வேண்டும், மனைவி கேட்கும் போது அளிக்காத பதிலைக் கடைசியில் நண்பனின் குழந்தையைக் கையில் ஏந்திய படி சொல்கிறான். மனைவி அழுதாள் என்று நண்பன் ஏன் சொல்கிறான்? இது போல பல நுட்பமான இடங்கள் வாசகர் Oyamada விட்டிருக்கும் நூலை இழுத்தால் மர்மமுடிச்சு அவிழும். Deconstruction செய்ய முடியாதவர் Oyamadaவை ரசிக்க இயலாது.

Real and surreal இரண்டுமே கலந்த கதையுலகம் Oyamadaவுடையது. Motherhood, Masculinity, Death, Child birth இந்த தீம்களைக் கொண்ட கதையை வாசிக்கையில் நாம் மிதப்பது போல் தெரியும். Oyamada ஒரு Excellent writer. ஜப்பானின் இன்றைய நவீன இலக்கிய உலகம் ஏராளமான பெண்களால் வளம் செய்யப்பட்டு வருகிறது. நூறுக்கும் குறைவான பக்கங்கள் கொண்ட இவரது மூன்று நாவல்களை இதுவரை ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.
Oyamada வின் Magical prose இந்த நாவலில் Short sentences ஆக வந்திருக்கிறது. Boydன் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு. Good things come in small packages.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s