ஒரு சிறுகதையில் மூன்று தலைமுறைகளைக் கொண்டு வந்தால் அது சிறுகதை இலக்கணப்படி சரியா? Atwoodன் Powerful words selectionல் எல்லாமே சரியாகிவிடும். Fairy tales, Witch craft என எத்தனையோ வந்தாலும் இந்தக்கதை அம்மா- பெண் என்ற மைய அச்சில் சுழல்கிறது. பெண் வளர்ந்து அவளும் அம்மா ஆகுகையில் வாழ்க்கை ஒரு முழு சுற்றை சென்றடைகிறது.
Single mother என்பது ஐம்பதுகளில் நிச்சயம் சவாலான ஒன்றாக இருந்திருக்கும். குழந்தையில் உன் தந்தையை garden gnome ஆக மாற்றி இருக்கிறேன் என்பதை நம்பி ஐஸ்கிரீம் கேட்பது, பதின்மவயதுகளில் அம்மாவைப் பிடிக்காமல் போவது, விட்டுச்சென்ற அப்பாவுடன் இரகசிய சந்திப்புகள் என்று ஒரு சராசரிப்பெண். அவளது அம்மா சொல்லும் மந்திரவாதக் கதைகள்!
Brianஉடன் சேரக்கூடாது என்று அம்மா சொன்ன பொய்க்கும், இன்று மகள் தன் டீன்ஏஜ் மகளுக்கு, உன் பாட்டி தன் சக்தியை விட்டுச் சென்றிருக்கிறாள் என்ற பொய்க்கும் என்ன வித்தியாசம்? மகள்களைப் பாதுகாக்க அம்மாக்கள் பொய் சொல்கிறார்கள். அம்மாக்கள் Evil. ஆனால் மகள்கள் அம்மாவை ஒரு காலத்தில் வேறுயாரையும் விட அதிகமாகக் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
அருமை…
LikeLike