Quote from the story:
““There is never as good a parent as the one who doesn’t give birth to a child,””
தனிமை என்பது Yiyun Liயின் கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் விஷயம். தன்னுடைய Ambitionக்காக சின்னவயது மகனை தோழியின் பொறுப்பில் விட்டு (கைவிட்டு) செல்வதும், அவள் மகன் வளர்ந்து பெரியவனாகி அறுபத்தி இரண்டு வயதில், விவாகரத்து செய்த இரண்டாவது மனைவியின் பெண்ணுக்காக (Some time step daughter!) அவளது நாயை வீட்டில் கொண்டு போய் வைத்துக் கொண்டு அக்கம்பக்கத்தினரின் ஆட்சேபனைக்கு ஆளாவதும் இரண்டு Extremes.
பெற்றோராக இருப்பது சில நேரங்களில் சுமை, சில நேரங்களில் சலுகை , சில நேரங்களில் தனிமையை விரட்டும் மருந்து. இரண்டு வயதானவர்கள் (இருவருமே குழந்தை இல்லாதவர்கள், இருவேறு குணநலன் கொண்டவர்கள்) அடிப்படையில் ரத்த சம்பந்தமில்லாது ஒரே கூரையின் கீழ் பல வருடங்கள் இருப்பதும், Covid பயம் Bayareaவில் அவர்கள் இருக்கும் பகுதியை அச்சுறுத்துவதும், சில பெற்றோர்கள் Over protective ஆக இருப்பதும் கதையில் நன்றாக வந்திருக்கின்றன. Yiyun Li இப்போது Star அந்தஸ்தைப் பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுபவர். அவர் எழுதுவதை அவரது அம்மா படித்துவிடக்கூடாது என்று சீனமொழிபெயர்ப்புக்கு நிரந்தரத் தடைவிதிப்பவர். இவரது சமீபத்தில் வெளிவந்த The Book Of Goose ஒரு சிறந்த நாவல். இவருடைய முந்தைய Where reasons end இழப்பின் வீணையை மீட்டும் இனிய நாதம். இரண்டுமே தவறாது வாசிக்க வேண்டியவை.