Kate Quinn சரித்திர நாவலாசிரியர். வரலாற்று ஆதாரங்களைத் தேடி எடுத்து அந்த தகவல்களை மையப்படுத்தி நாவல்கள் எழுதுபவர். இந்தக் குறுநாவல் அவருடைய வழக்கமான பாணியில் இருந்து விலகியது, Speculative Fiction.

லில்லி Woman Royal Serviceன் Y station Listener. ஆங்கிலமும் ஜெர்மனும் நன்கு தெரிந்த பெண்கள் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்களிடம் இருந்து வருகின்ற ரேடியோ அலைவரிசையை ஒட்டுக்கேட்டு, குறிப்பெடுத்து ராணுவத்திற்கு அனுப்புவார்கள். லில்லி அந்தப் பெண்களில் ஒருத்தி. அவள் அன்று கேட்கும் அலைவரிசையில் அமெரிக்க கடற்படை அதிகாரியின் குரல் கேட்கிறது. ஏதோ போரில் அவனுடைய கப்பல் மூழ்கடிக்கப்படும் வரை கேட்டுவிட்டுத் தகவலை அவளது அதிகாரிக்குச் சொல்கிறாள். யாரும் இவளை நம்பவில்லை. ஏனென்றால் அந்த அலைவரிசை 2023ஆம் வருடத்தில் இருந்து வந்தது.

இரண்டு Timelineகளில், எண்பதுவருடங்கள் இடைவெளியில் இருப்பவர்கள் ஒரு Wireless மூலம் பேசுவதும், ஒருவரால் மற்றொருவர் கவரப்படுவதும் Speculative work ஆக இருக்கலாம். ஆனால்
Kate Quinn , நேவியில் பணிபுரியும் அவருடைய கணவரிடம் கதையில் பிழைதிருத்தச் சொல்லி இருக்கிறார். அவர் மூலமாக Naval intelligence officerகளிடம் பல தகவல்களைப் பெற்றிருக்கிறார். இது போக ஒரு Research assistant வைத்துப் பல விஷயங்களைத் திரட்டி இருக்கிறார். இத்தனையும் ஒருகதைக்கு. நாமெல்லாம் ஒரு கதையை உட்கார்ந்த வேகத்தில் எழுதிவிடுவோம் இல்லையா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s