பொருட்கள் மனிதர்களை நினைவுபடுத்தும். கோபி பொட்டும் அதன் கீழ் ஒரு சிறிய வட்டப் பொட்டும் இப்போது யாரேனும் வைக்கிறார்களா? அப்பா விட்டுச்சென்ற கைக்கடிகாரம்…………. ஆனால் இந்தக்கதை
பொருட்களில் படிந்திருக்கும் நினைவுகளை அழிப்பது பற்றிய Fantasy கதை.
David Baldacciயின் ஒரு கதாநாயகனான Amos Decker, எதையுமே மறப்பதில்லை. போன வருடத்தில் நீங்கள் எத்தனை மணிக்கு எங்கே எந்த உடை உடுத்திக் கொண்டு வந்து என்ன சொன்னீர்கள் என்பதை அவனால் வார்த்தை மாறாது சொல்ல முடியும். Memory Manக்கு நினைவுகள் தலையில் அழுத்தும் சுமை. மாறாக Yoko Ogawa வின் Memory Police நாவல், அரசு மக்களின் மனத்தில் சில புத்தகங்கள், பொருட்கள் குறித்த நினைவுகளை அழிப்பது குறித்த நாவல். இந்த சிறுகதையில் காதலனைப் பிரிந்தவர்கள், மனக்கசப்புடன் விலகியவர்கள் பொருட்களில் படிந்திருக்கும் நினைவுகள் மனதில் கீறல்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க சுத்தம் செய்கிறார்கள். இந்தப் புடவை என் பிறந்தநாளுக்கு இருவரும் போய் எடுத்தது. அவனது புன்னகை வீசிய முகம். அன்றைய இரவு…….. அடுத்த முறை அதே புடவையைக் கட்டும் போது சின்ன சண்டை, பின் சரியாகி விட்டது. அடுத்த முறை பெரிய சண்டை. ஒரு மாதம் பேசவில்லை. அப்புறம் இருவரும் வெறுப்பை மாறிமாறிக் கொட்டினோம். அது இந்தப் புடவையில் சேர்ந்திருக்கிறது. அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று மட்டும் நிஜத்தில் சொல்ல முடியுமானால்…….
வேண்டாத நினைவுகளைக் கறையை அகற்றுவது போல் அகற்ற முயன்றால்………
ஆனால் அது சரிதானா என்பதே இந்தக் கதை கேட்கும் கேள்வி.