கேட்டியின் பெற்றோர் இருப்பது போதும் என்ற வறுமையில் வாழ்ந்தவர்கள். கேட்டியின் அம்மா ஒரு கதவில் டேப் போட்டு ஒட்டிய பழைய காரில் அவளை பள்ளியில் இறக்கி விட்டிருக்கிறாள். கேட்டி Datingக்கு வருபவர்களை வீட்டில் இருந்து அரைமைல் தூரத்தில் நின்று கொண்டு வரச் சொல்லி இருக்கிறாள். டேமியனை அவள் மணமுடித்தும் கூட அவனது அம்மா வீட்டின் Basementல் வாடகை கொடுக்க முடியாது தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இப்போது Reality TVஒன்றின் Homeshowவில் Stars. பணம் கொட்டுகிறது. பெரிய வீடு, விலையுயர்ந்த பொருட்கள், இரண்டு அழகான டீன்ஏஜ் பெண்பிள்ளைகள். எல்லாமும் கூடி வந்த நேரத்தில் டேமியன் இனிமேல் Reality show பண்ண முடியாது, அந்தரங்கம் என்பதேயில்லை, மகள்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறான். Is it going to be the end of the dream run?
இந்தக் கதை ஒரு Satire. Reality TV stars மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றிபெற்ற எல்லோருமே தங்களை Ideal couple ஆக Project செய்து கொள்வார்கள். நடுத்தர வர்க்கத்தினர் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அவர்களால் இவர்கள் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்க வாய்ப்பில்லை. பிரபலமான தம்பதியர் இருவரும் தனியறையில் தலையணைக்கடியில் கத்தியை வைத்துக் கொண்டு கூடத் தூங்கலாம். அடுத்து Career oriented coupleன் குழந்தைகளுக்கு மற்றவர்களை விட கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம். Courtney Sullivanன் Maine பலத்த வரவேற்பைப் பெற்ற நல்ல நாவல்.