Kate Atkinson, English Author. நல்ல டிடெக்டிவ் நாவல்களை எழுதியவர். இந்தக்கதை ஒரு Weird Fiction. பமீலா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து அவர்கள் உலகத்தைப் பார்க்கப் போய்விட்டதால் நேரத்தை நிறையக் கையில் வைத்திருப்பவர். அவரது கணவர் பல வருடங்களுக்கு முன்னரே இவரை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை மணந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டார். பமீலாவிற்கு Sexல் ஆர்வம் ஏதுமில்லை. ஆனால் அவர் எதிர்பாராத (நாமும்) ஒரு நிகழ்வினால் அவர் உலகம் தலைகீழாகப் போகிறது.
முதலாவது இங்கிலாந்தில் குடும்ப உறவுகள். பதின்ம வயதுகளில் விட்டுவிட்டுச் சென்ற பணக்காரத் தந்தையின் குடும்பத்துடன் தேடிச்சென்று உறவை வளர்த்துக் கொள்கிறாள் பெண். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும் மகனும் அவனுக்கும் அம்மாவிற்குமுள்ள உறவும், இருபத்தைந்து வயது வித்தியாசம் இருந்தாலும் பணத்திற்காகத் திருமணம் செய்யும் பெண்கள், வயதாகி விட்டதனால் Sexல் Interestஇல்லை என்பவர்கள் Odd man out ஆகிப்போவது என்று இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு இந்தக்கதையில்.
அடுத்ததாக சமூகத்தால், உறவுகளால் ஒரு Interesting personஆகக் கருதப்படாதவர்கள். இவர்களை மென்மையாகத் தவிர்க்க எல்லோரும் விரும்புவதும் இவர்களுக்குத் தெரியும். ஆனால் இவர்களால் அதை மாற்ற ஒன்றும் செய்வதற்கில்லை. இவர்கள் பெரும்பாலும் புத்தகக் காதலர்களாக இருப்பார்கள்.