““He sounds like a sad specimen” . நல்ல எழுத்தாளர்கள் அவர்களது வார்த்தைத் தேர்வில் கவனமாக இருப்பார்களா அல்லது சரியான வார்த்தைகள் அவர்கள் உபயோகிக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்குமா?

அவளுடைய முப்பத்தொன்பதாம் வயதில் அவள் கர்ப்பமாகிறாள். அவளுடைய Boy friendக்குத் தெரிவித்த நாளே அவனைக் கடைசியாகப் பார்த்த நாள். அதன் பின் அவள் குழந்தைக்கு எது ஒத்துக்கொள்ளும் என்று பார்த்துப்பார்த்து சாப்பிட்டு, Laborல் மிதமிஞ்சிய வேதனையை அனுபவித்து, மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தை பால் குடிக்காததால் மிஷின் மூலம் பாலெடுத்து என்று Motherhood தொடர்கிறது.

இவள் இரண்டுமுறை கர்ப்பமாகிறாள். இரண்டுமுறையும் அந்த ஆண்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போதுள்ளவன் சொல்கிறான், ” நீ பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தேன்”. ஆண் உடல் உடலுடன் உரசும் அந்த மகிழ்வை இழக்க விரும்பாததற்குப் பெண் பெரிய விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மேலோட்டமாக Motherhood மையக்கரு போலத் தோன்றினாலும் இந்தக் கதையில் பல அடுக்குகள் இருக்கின்றன. முதலாவது, பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும் போது தான் அவள் தன் தாயை முழுமையாகப் புரிந்து கொள்கிறாள். இது பல பெண்கள் திரும்பத்திரும்பக் கூறுவது. அடுத்ததாக
அவனை விட அவள் உத்தியோகத்தில், சம்பாதித்யத்தில் கூடுதலாக இருந்தாலும், அமெரிக்காவிலே வாழ்ந்தாலும் நைஜீரியப் பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளியேற முடியாது. அவளது அப்பாவுக்கு இவள் அம்மாவை விட்டு இன்னொரு பெண்ணிடம் செல்வது எவ்வளவு எளிதான ஒன்றாகிறது! அடுத்து நைஜீரியர்களின் சடங்குகள் எந்த தேசத்தில் இருந்தாலும் கடைபிடிக்கப்படுவது. அடுத்தது தொடர் பிள்ளைப்பேறு பெண்கள் உடலுக்கு மற்றும் உயிருக்கு ஆபத்து என்றாலும் ஆண்கள் அது குறித்துக் கவலைப்படாதது. கடைசியாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பல பெண்கள் தாங்கள் செய்யாத தவறுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஆண்களை விடுதலை செய்வது. Chimamanda is such a good writer and this story is fully loaded.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s