Jefffery Deaver அமெரிக்காவைச் சேர்ந்த Crime Writer. ஏராளமான Mystery novelகளை எழுதியுள்ளார். இவரது Lincoln Rhyme Series இவரைப் படிக்க விரும்புபவர்கள் தொடங்குவதற்கு நான் பரிந்துரைப்பது. இது குறுநாவல்.
Middleton உலகின் வேறெங்குமிருக்கும் காவல்துறையைப் போலவே குறைந்த எண்ணிக்கையிலான Detectiveகளுடன் நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் வைத்த முதல் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்படும் போது ஒரு கவிதையும் கண்டுபிடிக்கப்படுகிறது. காவல்துறைக்கு கவிதை என்ன சொல்கிறது தெரியவில்லை. இப்போது இரண்டாவது கவிதை. அதற்கும் அர்த்தம் தெரியவில்லை. கவிதை கற்பிக்கும் ஆங்கில ஆசிரியரின் உதவியோடு வெடிகுண்டின் இரண்டாவது இடமும் கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்து மூன்றாவது இடம். அங்கே வெடிகுண்டு இல்லை, ஆனால் Witness programல் இருந்த ஒருவர் கொல்லப்படுகிறார். எல்லா வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கும் பின்னால் வேறு ஏதோ வலுவான காரணம் இருக்கக்கூடும். அது என்ன?
தொன்னூறு பக்கங்களே கொண்ட இந்தக் குறுநாவல் ஒரு Roller coaster ride. Crime storiesக்கு வேண்டிய எல்லா Ingridientsம் Perfect ஆக கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு Crime storyயில் கவிதையின் இலக்கணம் வருவது ஆச்சரியம். ஆம் Deaver கவிஞரும் கூட.
““Poems are about substance and form. That’s what’s so wonderful about them. The poet wants to convey a meaning, and then they pick a structure that best does that.”
“A poet gives voice to feelings that readers sense but can’t articulate.”