Burner phone என்பது, விலைகுறைவான, முன்பே பணம் செலுத்தப்பட்ட சிம்கார்ட் அடங்கிய போன். குறிப்பிட்ட வேலைக்காக, பெரும்பாலும் சட்டவிரோதமான காரணங்களுக்காக பணம் கொடுத்து, யார் உபயோகித்தார் என்று தெரியாத வகையில் உபயோகிக்கப்படுவது. சிலவேளைகளில் கள்ளக்காதல்களுக்கும் பயன்படுவது.
From the book:
“Cautions men to remember, whenever they meet a beautiful woman, that somewhere, someone is tired of her.”
Cheating என்பது Gambling போன்ற ஒன்று, Adrenalineஐத் தூண்டுவது. அடைவதை விட அடைவோமா, இல்லையா என்ற uncertainity தரும் ஆனந்தம். கதை முழுவதுமே கணவன் இன்னொரு மணமான பெண் விலக விலக Chat மூலம் தொடர்வது. அது மனைவிக்குத் தெரியாது என்று அவன் நினைத்திருக்கும் போது, ஒவ்வொரு Chatஐயும் அவன் மனைவி அறிவது. இருபத்தைந்து வருடங்கள் மணவாழ்விற்கு எந்த அர்த்தமுமே இல்லாமல் போகிறது. கதையில் பாதி Chat தான். அவனது உருட்டல்கள், அவளது நழுவல்கள். கிட்டத்தட்ட எதிர்பார்த்த முடிவு எனினும் Fast phased story.
Laura Lippmanன் நாவல்கள் இன்னும் விறுவிறுப்பானவை. குறிப்பாக Tess Monaghan Series.