அமெரிக்க எழுத்தாளர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். Alice Hoffmanஐப் படிக்காதவர்கள், அவருடைய Magic seriesல் இருந்து தொடங்கலாம்.
Isabel ஒரு Professional dog walker. நாய்களைத் தவிர அவளுடன் யாருமில்லை. விவாகரத்து ஆனபின் முழுத்தனிமை. அவளது பெற்றோர் முன்பே இறந்துவிட்டனர். ஒரே அக்காவையும், ஊரையும் விட்டுப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பன்னிரண்டு வருடங்களாகச் சகோதரிகளுக்குள் பேச்சு வார்த்தைகூடக் கிடையாது. ஆனால் இப்போது, அக்காவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. HELP என்ற ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருக்கிறது. ஏதோ மோசமான விஷயம் நடந்திருக்க வேண்டும். Isabel போகாமல் இருக்க முடியாது.
இரண்டு விஷயங்களைச் சுற்றியே இந்தக் கதை நகர்கிறது. முதலாவது இரத்தஉறவு. பால்யநினைவுகள் எந்த வேறுபாட்டையும், பேதங்களையும் போக்கி காலஇடைவெளியை மூட வல்லவை. இரண்டாவது வயலட் அச்சுஅசல் அவளது அம்மா போல் இருந்தாலும் குணத்தில் அவள் சித்தியைக் கொண்டிருக்கிறாள். பிறந்ததில் இருந்து பார்க்காத சித்தி போல் இருப்பது ஜீன்கள் செய்யும் மாயம்.
இளமையில் தொடங்கும் வாசிக்கும் பழக்கம் பிள்ளைக்காதல். எப்போதும் மறப்பதற்கில்லை. இடையில் வாழ்க்கை அடிக்கும் அடியில் தடைபட்டாலும் மீண்டும் எப்படியும் ஆரம்பித்தே தீரும். வாசிப்பு பழக்கம் என்று சொல்வது கூடத்தவறு. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. தலைப்பு உண்மையில் புத்தகக்கடை வைத்திருந்தவரது இரண்டு மகள்கள் குறித்தது. நாற்பது வயதுக்கு மேல் வாசிப்பை ஆரம்பித்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஓய்வுபெற்று உங்களைப் போல் படிக்க வேண்டும் என்று சொன்னவர்களில் பலர், தொலைக்காட்சியையும், மோட்டுவளையையும் பார்த்துக்கழித்து, வாசிப்பைத் தொடங்காமலேயே உயிரை விட்டுவிட்டார்கள்.