பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரிட்டனிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு சென்று கடவுளின் அருமைபெருமைகளைக் கற்பிக்கச் சென்ற Missionary ஒருவர், வேறொரு பாடத்தைக் கற்றுக் கொள்வதே கதை. அவர் மனைவிக்கு எழுதும் தொடர் கடிதங்கள் கதையைச் சொல்கின்றன. Optimistic ஆகத் தொடங்கும் மனநிலை Pessimistic ஆக முடிகிறது.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்று அவர்களை civilize செய்வது, இவர்கள் கடவுளை அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது போன்றவற்றிற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? 2021ல் குழந்தைத் திருமணத்தடை சட்டத்தை விவாதிக்கும் இவர்கள் எந்த நாட்டிற்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?
அடிப்படையில் கோழைகள் இவர்கள். இவர்களுக்கு எதிரான போதுமான வன்முறையை எந்த நாட்டிலும் காட்டாததும், அங்கே இருப்பவர்களுக்குள் கலவரத்தை மூட்டிவிட்டு இவர்கள் குளிர்காயும் Strategy வெற்றிகரமாக முடிந்ததும் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
Tochi Onyebuchi அமெரிக்காவில் குடிபுகுந்த நைஜீரிய எழுத்தாளர். இவரது Riot Baby பலத்த கவனத்தை ஈர்த்த நூல்.