அமெரிக்க எழுத்தாளர். இன்று திரில்லர் நாவல்கள் எழுதுபவர்களில் அதிகம் வாசிக்கப்படுபவர்களில் ஒருவர். இதுவரை இவரை வாசிக்காதவர்கள் The Stranger Insideல் இருந்து தொடங்கலாம்.
“Show me your crooked teeth
The nose you were born with
The birthmark you had removed
Your childhood scars
I want to see all your beautiful ugly”
மணம்செய்து கொள்ளப்போகும் பெண் வேறு ஒருவரை முத்தமிடுவதைப் பார்த்தால், நண்பியின் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லிச் சென்றவள் வேறெங்கோ சென்றிருந்தால், அவளைப் பின்தொடர்ந்து என்ன செய்கிறாள் என்பதைக் கண்காணிப்பதை இந்தியாவில் அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். அவன் மீது சிலர் பரிதாபம் கூடப்படலாம். ஆனால் USல் இது Seriousஆன விஷயம். Stalking செய்வதாகப் போலிஸில் புகார் அளிக்க முடியும். Restraining order வாங்கமுடியும்.
Will is a broken man. அவனது உயிர்க்காதலி அவனது வன்முறையைப் பார்த்து பயந்து விலகி, இவன் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு, அதிலிருந்து வெளியே வருவதற்கும், அவனுடைய முதல் நாவலை எழுதி வெளியிடவும் முயன்று கொண்டிருக்கும் பொழுது சமூகஊடகத்தின் மூலம் அவள் மீண்டு வருகிறாள். இருவரது பொதுவான தோழியும் இவனது வாழ்க்கையில் மீண்டும் வருகிறாள்.
Will ஏன் ஒருசராசரி ஆணாக நடந்து கொள்வதில்லை என்பதற்கு இளமையில் நடைபெற்ற ஒரு சம்பவம் காரணமாக இருக்கிறது. ஆனால் சகோதரி, காதலி, தோழி என எல்லோருமே பொய்யை உண்மை என்று அவனை நம்பவைக்கும் பொழுது அவன் எப்படி சராசரியாக நடந்து கொள்ள முடியும். Sometimes believing is seeing.