Sheela வயநாட்டில் பிறந்து வளர்ந்தவர். தற்போது கத்தாரில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. இது இவருடைய முதல்நாவல்.

ஜெயஸ்ரீ எல்லோருக்குமே அறிமுகமான மொழிபெயர்ப்பாளர். Harishன் Moustache நாவலுக்கு அவருடன் சேர்ந்து JCB விருதைப் பெற்றவர். பல நூல்களை மொழிபெயர்த்ததுடன் , சுயமாகவும் படைப்புகள் வெளியிட்டவர்.

Snippet from the book:

“Why have you come back at the dusk of this life to rekindle the old flame of love?
Until yesterday, my love was only for the star a thousand light years away, for the light that I had imagined would never reach me.
Why now? Why fall into this river that is almost dry?
Still, let me dive into your water that holds my reflection. Hold me close, rock me in your waves…
Hark, my beloved forest, this, right here, is love.”

வடகேரளத்தில், உயரே, பனிக்கும், மர்மங்களுக்கும் நடுவே நாட்டார்கதைகளுக்கும் காடுகளுக்குமிடையே, சங்ககாலத்தில் இருந்து வாழும் பண்டைக் கலாச்சார ஆதிவாசிகளின் வசிப்பிடமான வயநாடு. அதன் வளங்கள் ஆங்கிலேயரை, இந்தியத் தொழிலதிபர்களை ஈர்க்கின்றன. அவற்றைக் கொள்ளையடிக்கவும், ஆதிவாசிகளை அடிமைகளாக்கவும் பலரும் வருகின்றனர். 1970ல் தாமஸ், சாரா என்ற இரண்டு ஆசிரியர்கள், சாரா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளாததால் உயிருக்குப் பயந்து வயநாடு வருகின்றனர். அங்கிருந்து ஆரம்பிக்கும் கதை நான்கு தலைமுறைக் கதையாக 2018ல் முடிகிறது.

ஏராளமான கதாபாத்திரங்கள் வருகின்ற நாவல் இது. ஆண்களில் குறிப்பிட்டாற்போல் தாமஸ், பத்மநாபன், பீட்டர், லூக்கா, ஜேம்ஸ் போன்றோர் அழுத்தமாக வருகிறார்கள். ஆனால் பெண்கள் அன்னம்மாவில் ஆரம்பித்து இஸபெல்லா, சாரா, லூஸி, காளி, சூசன், டெஸ்ஸா என்று ஒவ்வொரு பெண்பாத்திரமும் முத்திரையைப் பதித்துச் செல்கின்றன.

கல்லுவயல், தம்பிரான்குன்னு என்று காடும் காடைச் சேர்ந்த இடமும் கபினியால் வளம்பெற்ற வயல்களுமாக இருந்த இடங்கள், ஒருசிலரது பேராசையால் அழிக்கப்பட்டு, ரிஸார்ட், சுற்றுலா என்று தனியார் வசம் போய்ச் சேருகின்றன. ஒரு பக்கம் அழிப்பதும் இன்னொரு பக்கம் மீட்டெடுப்பதுமான போராட்டங்கள் காலங்காலமாக நடந்து கொண்டே இருக்கின்றன.

கடிதங்கள், டயரிக்குறிப்புகள், நாட்டுப் பாடல்கள், கதைகள், விவிலியத்தில் இருந்து
மேற்கோள்கள், மார்க்வெஸ், மலையாள மாஸ்டர்களின் நூல்களிலிருந்து கருத்துகள், மலையாள சினிமாப்பாடல்கள், கிருத்துவ பக்திப்பாடல்கள், முன்னறிவித்தல் (Foreshadowing of events) என்று பலவிதமான யுத்திகள் கதையை நகர்த்திச் செல்கின்றன.
பனியாக்களின் மொழி இடையிடையே வருகின்றது. இந்த நாவல் காட்டின் இரகசியங்களை, உண்மையையும் பொய்யையும், வரலாற்றையும், கற்பனையையும், நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒன்றாகக் கலந்து சொல்வது. சில காதல்கள், சில காதல்தோல்விகள், போராட்டங்கள், அடக்குமுறைகள் என்று எல்லாவிதமான விஷயங்களும் கலந்து வருவது.

நாவலின் களம் இவர் வளர்ந்த கல்லுவயல்.
நாவலில் வரும் சூசனின் இளமைப்பருவம் இவருடைய இளமைப்பருவம். அதனால் இந்த நாவலே இவருடைய உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய Organic telling of story.
இருந்தும் இந்த நாவலுக்காக முதியோர்களிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறார். ஆதிவாசிக்குடிகளுக்கு. சென்று அவர்கள் தரப்பைக் கண்டறிந்திருக்கிறார். வயநாடு குறித்து எழுதப்பட்ட பல புனைவுகளையும் அல்புனைவுகளையும் வாசித்திருக்கிறார். இந்த வாசிப்பு இவரை பன்னிரண்டாம் நூற்றாண்டின் சம்பு கவிதைகள் வரைக் கொண்டு சென்றிருக்கின்றது. எல்லாம் சேகரித்து இந்த நாவலை எழுத மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய வார்த்தைகளில் இந்த நாவல் ஒரு பிரார்த்தனை. ஜெயஸ்ரீ நாவலைப் பலமுறை படித்தது மட்டுமன்றி வயநாடு குறித்து, கிருத்துவ மேற்கோள்கள் குறித்து பலநூல்களை வாசித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் இந்த நாவலை மொழிபெயர்க்க அவர் எடுத்துக் கொண்ட காலம். இப்படித்தான் நல்ல நாவல்கள் உருவாக முடியும். என் காலம் முழுதும் இதை சலிக்காமல் நானும் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s