Deaverன் புத்தகங்கள் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நூற்று ஐம்பது நாடுகளில் விற்பனையாகி இருக்கின்றன. இது இவரது குறுநாவல்.
புதிதாக ஒரு Serial கடத்தல்காரன் உருவாகி இருக்கிறான். முதல் கடத்தலில் கடத்தல்காரன் கொடுத்த க்ளூவை வைத்துக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இரண்டாவது கடத்தலிலும் அதே போலவே நேர்கிறது. இரண்டிலுமே கடத்தப்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்படுகிறார்கள். போலிஸைப் பொறுத்தவரை பைல் Close செய்யப்படுகிறது. ஆனால் உண்மை எப்போதும் ஒன்றே அதற்கு மாற்று உண்மை கிடையாது என்ற நம்பிக்கை கொண்ட பத்திரிகையாளன் எதற்காகக் கடத்தல்கள் நடந்தன என விசாரணை செய்கிறான். பணமோ, பகையோ காரணிகள் இல்லை என்றால் எல்லோருடைய பார்வையையும் ஈர்க்கவா? ஆனால் அது இன்றைய நவீன பத்திரிகையுலகில் சிலமணிநேர ஆயுளே கொண்டதல்லவா? இல்லை சின்னக்கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோட்டையிடும் தந்திரமா?
காவல்துறையினர் தேடுதலில் நடத்தும் Police Proceduresல் ஆரம்பித்து சட்டென்று பத்திரிகைத் தொழிலுக்குக் கதை தாவுகிறது. உண்மையான ஜர்னலிஸம் மெல்ல அழிவதையும் பாதி உண்மைகள் பரபரப்பான ஜர்னலிஸமாக மாறுவதையும் கதை குறிப்பிடுகிறது. When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. – Sherlock Holmes.