திருமணங்கள் உலகமெங்கும் பல விருந்தினரைக்கூட்டி ஒரு விழாவாக நடக்கின்றன. விவாகரத்துகள்? விவாகரத்து எப்போதுமே தனிப்பட்ட முடிவுகள் எனவே இருவர் பேசிக்கொண்டு நீதிமன்றத்தில் சத்தமில்லாது முடித்துவைக்கப் படுகின்றன. ஒருவேளை, விவாகரத்துக்கும் விழா எடுத்துக் கொண்டாடப்பட்டால்! இத்தனை காலம் மகிழ்ச்சியாய் இருந்தவர்கள் பிரிகையிலும் மகிழ்ச்சியாகப் பிரிவோம் என்று ஆசைப்பட்டால்! நம் திருமணத்திற்கு வந்தவர் எல்லோரும் பிரிவிற்கும் வரவேண்டும் என்று விரும்பினால்!
Stan நடுத்தரவயதில், ஒரு மோசமான Breakup
ற்குப் பிறகு தனியாக அலைபவன். Barல் கிடைத்த பெண் சுவாரசியமானவள். அவள், அவளுடைய நண்பர்களின் Divorce partyக்குத் துணைக்கு வரச் சொல்கிறாள். அங்கே எல்லாமும் கல்யாணச்சடங்குகளைத் தலைகீழாகச் செய்வது போல் வரிசைக்கிரமமாக நடக்கிறது. திருமணத்தின் போது பரிசாக அளித்த ஆமை சடங்குகள் முடிந்தபிறகு வெளியேறுகிறது. Stanம் ஒரு சிறுமியும் அதைத் தொடர்ந்தபடி…… ஆமை ஒரு Metaphor. நூறாண்டுகள் வாழும்.
ஒரு கதையின் பெரும்பகுதியை Speculative fictionஆகச் சொல்லி விட்டு, கடைசியில் கதையில் ஒரு Jolt கொடுத்து, தத்துவார்த்தமாக முடிப்பது எளிதில்லை. அதை விடக்கடினம் சிறுகதை வடிவம் சிதையாமல் பார்த்துக் கொள்வது. Karen மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர். ஏராளமான வாசகர்களைக் கொண்டவர். இவரது Orange World சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது. குறிப்பாக இந்தக்கதையை வாசித்துப் பாருங்கள்.