Jeff அமெரிக்க எழுத்தாளர். Editor. இலக்கிய விமர்சகர். இவரைப் படிக்க ஆரம்பிக்கிறவர்கள், Southern Reach Trilogyயில் தொடங்கலாம்.
சமந்தா, அவளுடைய வீட்டில் யாரோ கொள்ளையடிக்க வந்து இருக்கிறார்கள் என்று பயந்து, துப்பாக்கியால் சுட்டதில் இறந்தது கணவனின் மாணவி.
போலிஸ் அவள் அத்துமீறி வீட்டில் நுழைந்தவரைக் கொன்றது தற்காப்புக்கு என விடுதலை செய்கிறது. ஆனால் கணவன் இவளை மன்னிக்கவில்லை. கணவனைப் பிரிந்து, இறந்து போன அப்பாவின் காட்டின் நடுவே இருக்கும் வீட்டிற்கு தனிமைநாடி வருகிறாள். ஆனால் ஓடையின் மறுபுறம் இருந்து வரும் அடுத்த வீட்டுக்காரனும், கேள்விகளாய் கேட்கும் பக்கத்து வீட்டுக்காரியும் இவளுடைய நிம்மதியைக் குலைக்கிறார்கள். கடைசியில் யாரும் எதிர்பாராதது நிகழ்கிறது.
தவறுதலாக என்றாலும் தன்னால் ஒரு உயிர் போய்விட்டதால், அடுத்து ஒரு சின்ன உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடக்கூடாது என்றிருக்கும் பெண்ணுக்கும், பார்ப்பதையெல்லாம் மரமோ, விலங்கோ எல்லாவற்றையும் அழிக்கும் ஒரு ஆணும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நன்றாக சொல்லப்பட்டிருக்கின்றன. Open ending கதைக்கு மற்றுமொரு சிறப்பு.