‘The Husband Stitch” என்ற இவருடைய சிறுகதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Her Body and Other Parties என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பைத் தமிழுக்குக் கொண்டு வரலாம்.

Hand Games சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. சீனாவில் Rock paper Scissors, தமிழ்நாட்டில் மாக்குத்து, மஞ்சக்குத்து எல்லாம் Hand games. பென்சில்வேனியாவில் சிறுவர்கள் விளையாடும் பொழுது சொல்லும் Tiger, tiger, burning bright, in the forests of the night என்ற வரிகள் ஒரு ஆராய்ச்சியாளரை அதன் காரணத்தைத் தேடி அலைய வைக்கிறது. இத்தனை வருடங்களான பிறகு அதற்கான உண்மைக்காரணம், பலர் கவனிக்கத் தவறியது வெளியில் வருகிறது.

ஜிம் அவனுடைய பன்னிரண்டு ஏக்கர் பூங்காவில் புலிகளை வளர்க்கிறான். அவ்வப்போது புலியை வெளியில் பார்த்ததாக யாரேனும் சொல்வதும், ஜிம் அவனுடைய புலிகள் எல்லாம் பத்திரமாக இருப்பதாக உறுதியளிக்கிறான். ஒருநாள் இரத்தசிவப்பாக விடிகிறது. அந்தப் பகுதியில் எண்பத்தி ஏழுபேர் புலிகளால் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறார்கள். காணாமல் போன ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பின் ஒருபோதும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஜிம்மின் பாதியுடல் பூங்காவில் கிடக்கிறது.

Machado ஒரு Natural talent. இவருடைய In the Dream House சுயசரிதை. கதைகள் ஒவ்வொன்றிலும் இவரது Presentationம், மொழிநடையும் வெகுவாக மாறுகிறது.
கியுபாவில் இருந்து வந்த தாத்தாவும், ஆஸ்திரியாவிலிருந்து வந்த பாட்டியும் அமெரிக்காவில் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். Machado மூன்றாம் தலைமுறை. முழு அமெரிக்கர். இவருடைய கதைகள் தமிழுக்கு வரவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s