கனடாவில் பிறந்து வளர்ந்தவர். கானாவைப் பூர்விகமாகக் கொண்டவர். நான்கு நாவல்களை இதுவரை எழுதியுள்ள இவரது இரண்டு நாவல்கள் புக்கர் இறுதிப் பட்டியலுக்கு வந்திருக்கின்றன.
காடுகள், பறவைகள், விலங்குகள் இவற்றைச் சுற்றியே குழந்தைப் பருவம் கழியும். பெரிதாக கல்வி வசதி இல்லாததால்
பள்ளிக்கூடப்படிப்பு இல்லை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை, கூடப்பிறந்தவர்கள் ஏராளம் என்று இயற்கையோடு இணைந்த வாழ்வு , மேற்கு ஆப்பிரிக்காவின் 1700களில்.
அவர்களுக்கு இருக்கும் ஒரே அச்சம், வெள்ளையர்கள் அவர்களை அடிமைகளாக்க வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வது. பலநேரங்களில் குழந்தைகள், Pawnகளாகத் தூக்கிச் செல்லப்பட்டு அவர்களது தந்தை பணம் கொடுத்து விடுவிக்குமாறு ஏற்பாடு. 99.9% யாரிடமும் பணம் இருப்பதில்லை அதனால், குழந்தைகள் மீட்கப்படுவதில்லை. ஆறு வயதுக் குழந்தை, இன்னும் ஐம்பது அறுபது குழந்தைகளுடன் ஒரு படகில் நெருக்கி அடித்துக் கொண்டு, பிறந்த நிலம், உற்றார் பெற்றோரை இனி ஒருநாளும் பார்க்கப் போவதில்லை என்ற உணர்வுடன் செல்லும் காட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அடி உதை அதிக வேலையைத் தாண்டி பிழைக்கும் குழந்தைகள் குறைவு.
ஆனால் இந்த பன்னிரண்டு வயதுப் பெண் ஐந்து வருடமாகப் பிழைத்திருக்கிறாள். வெள்ளைக்காரர்களுக்கு இவள் தேவை. ஆறேழு மொழிகளை அனாயசமாகப் பேசும்
இவளது திறமை அவர்களுக்கு மிகவும் தேவை. ஆனால் அவள் மனதில் வேறொரு Hidden agenda இருக்கிறது.
ஆப்பிரிக்காவில் Child trafficking குறித்த தகவல்களை இவரது நாவலுக்காக ஏற்கனவே ஆய்வு செய்து வைத்திருந்ததால் இந்தக்கதையில் காட்சிகளில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது. இவர் Writing courseல் முதுகலைப்பட்டம் பெற்றதோடு, ஜெர்மனியில் writer-in-residenceஆக சிலகாலம் இருந்தவர். எனவே மொழிநடை Powerfulஆக இருக்கிறது. “I knew then that misfortune is not a slow descent, that anything can be taken abruptly and a life can be changed.”