Snippet from the book:

“The river is Sarasi, the village is Ranipur in Bengal, the mansion belongs to Somnath Chowdhury, zamindar. He is playing chess with Priya, daughter of his best friend, Nabakumar Ganguly. The country is India, the year is 1946, the month is August. Everything is about to change.”

கல்கத்தாவிற்கு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலா தவறான நேரத்தில் அமைந்ததால், குடும்பத்தலைவரைப் பலிகொடுக்கும்படி ஆகிறது. டாக்டர் நபகுமாரின் சேவை மனப்பான்மையே இந்து-முஸ்லிம் கலவரத்தில் அவர் உயிர் போகக் காரணமாகிறது. ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்த்தவர் அவர். மனைவி, மூன்று பெண்களை பணமில்லாது, நிர்கதியாக விட்டுச் சென்றிருக்கிறார். மூத்த மகள் தீபா பேரழகி, முஸ்லிம் இளைஞனைக் காதலிக்கிறாள். கடைசி மகள் பிரியா, மிகவும் புத்திசாலி, டாக்டர் ஆகும் கனவுடன் இருக்கிறாள். நடுவில் அழகும், புத்திசாலித்தனமும் இல்லாத கால் ஊனமுற்ற ஜாமினி என்ன செய்யப் போகிறாள்?

இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் பகுதியில் முஸ்லிம் கடைகள், வீடுகளைத் தாக்குகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மை இருக்கும் இடத்தில் அதையே செய்கிறார்கள். பரஸ்பர வெறுப்பு உச்சகட்டத்தை அடைகிறது. நேற்று வரை நட்பு பாராட்டியவர்கள் எதிரிகளாகிறார்கள். இந்தியாவிற்கே உரித்தான கணவனை இழந்த குடும்பத்துடன் எந்தத் தொடர்பு வைத்துக் கொண்டாலும் துரதிருஷ்டம் தொடரும் என்ற மூடநம்பிக்கை இந்தக் குடும்பத்தை ஆட்டுவிக்கப்போகிறது.

1946ல் ஆரம்பித்து 1948ல் முடியும் Period Fiction story இது. தகவல் பிழை இல்லாது நன்கு ஆய்வு செய்யப்பட்டு, இந்தத் தியேட்டரில் இந்தப்படம் ஓடியது, இவர் Chief Ministerஆக இருந்தார், காந்தி இப்படி சொன்னார், ஜின்னா அப்படி சொன்னார் என்று சின்னச்சின்ன Dataகள் சரி பார்க்கப்பட்டு கதைக்குள் பொருந்துகின்றன. சித்ரா இந்த நாவலின் காலகட்டத்திற்குப் பிறகே பிறந்திருந்தாலும், நாவலின் களமான கல்கத்தாவில் பிறந்து இருபது வயது வரை அங்கேயே வளர்ந்தவர். அதனால் அவரால் இந்தக் கதையை வெகு இயல்பாகக் கையாள முடிந்திருக்கிறது.

தீபாவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அவளது அம்மா அவளை வீட்டை விட்டுத் துரத்துகிறாள். அவள் படிப்புக்கு வேலை கிடைப்பது கடினம். காதலனின் துணையோடு முஸ்லிம் லீக் அலுவலகத்தில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு சேர்கிறாள். தினம் இந்துக்களை, இந்து தெய்வங்களை அவர்கள் திட்டுவதைக் கேட்டுக் கொண்டு வேலை பார்க்கிறாள். நல்ல சாப்பாட்டிற்கு கூட வருமானம் இல்லாத வேலை. ஆனால் இப்போது அவள் ஒரு இந்து என்று வெளியே தெரிந்தால், அவளை உளவாளி என்றும் அவள் காதலனை சதிகாரன் என்றும் சொல்ல நேரும். அவளுக்கு இரண்டே வழிகள் இப்போது. ஒன்று வீட்டுக்குத் திரும்பிச் செல்வது. இரண்டாவது மதம் மாறி மணம் செய்து கொள்வது. அப்போது மட்டுமல்ல, இப்போதும் எப்போதும் இது தான் நிகழும். திரும்ப முடியாத தூரம் வந்தபின்னே முஸ்லிமோ, கிருத்துவரோ சொல்லப் போவது, நீ மதம்மாறவில்லை எனில் நாம் திருமணம் செய்ய முடியாது.

இது Partition Story. ஆனால் அதை விட அழுத்தமாக மூன்று பெண்களின் கதை. ஒரே வீட்டில் பிறந்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, சண்டையிட்டு வளர்ந்த பெண்கள். அவர்களுடன் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மனிதர்கள், அந்தக்காலத்தில் வங்காளக் கலாச்சாரம், நம்பிக்கைகள், வெறுப்புகள், அழிவுகள் இத்துடன் ஒரு நாட்டின் கதையும் பின்னணியில் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பெண் மருத்துவராவதைத் தடுப்பது பிரிவினையின் பின்னர் ஜின்னாவும், பாகிஸ்தானும் உருதுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெங்காலியை அழிக்க நினைத்த போது, எழுந்த குமுறல், காந்தி இறந்த போது இந்தியாவில் பலர் அடைந்த நிம்மதி என எல்லாமே வருகின்றது.

Direct Action day என்பது ஜின்னா முடிவாக எடுத்த ஆயுதம். “Either a divided India or a destroyed India”. இவ்வளவு வெறுப்பை வளர்க்கும் வரை இந்தியாவை ஒன்றாக வைத்திருக்க வேண்டுமா? இப்போது கேட்பது எளிது ஆனால் அன்றைய சூழல் வேறு. காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விட்டுக்கொடுக்க எளிதில் சம்மதிக்கவில்லை. நடந்த குற்றங்களுக்கு, ரத்த ஆறு ஓடியதற்கு காந்தியை மட்டும் குற்றம் சொல்லியும் பயனில்லை. ஆங்கிலேயர் இரு மதங்களிடையே வெறுப்பை வளர்த்தனர். நாம் அறுவடை செய்தோம், செய்து கொண்டு இருக்கிறோம்.
June 1948ல் வழங்க இருந்த சுதந்திரத்தை ஆகஸ்ட் 1947ல் கொடுத்து விட்டு அவர்கள் கைகளில் அதிகரத்தம் சிந்தாது பார்த்துக் கொண்டார்கள்.

Meticulous researchஉடன் கற்பனையின் அழகியல் சித்ராவின் எல்லா நாவல்களையுமே சுவாரசியமான வாசிப்பிற்கு ஏற்றவை ஆக்குகின்றன. சித்ரா ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் பட்டத்தை அமெரிக்கப் பல்கலைகழகங்களில் பெற்றவர். எழுதும் கலையை பலருக்கு பயில்விப்பவர். Devoted இந்து என்பதால் சித்ராவின் தட்டு இந்துக்கள் பக்கமே பெரிதும் சரிகிறது என்றாலும், புதிய தலைமுறை, குறிப்பாக தென்மாநிலங்களில் வசிப்பவர் பிரிவினையின் போது நடைபெற்ற கொடூரங்களைத் தெரிந்து கொள்ள இந்த நாவல் உதவும். அந்த விதத்தில் துளிகூட புனைவை சித்ரா கலக்கவில்லை. இந்த நாவல் நேற்று (30/11/2022) உலகமெங்கும் வெளியாகியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s