அமெரிக்க எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியுள்ளார். உணர்வுகள் அதிகமாக வெளிப்படும் கதைகளை எழுதியவர்.
ஆலன் நாசாவில் விஞ்ஞானி. கரோல் அவனிடம் காதலைத் தெரிவித்த போது அவனால் மறுக்கமுடியவில்லை. இந்தியத் திருமணங்கள் போல, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளாமலேயே கரோல் அவசரப்பட்டதால், அவசர நிச்சயம், அவசரக் கல்யாணம். கரோல் போன்ற பெண் கிடைப்பது என்பது யாருக்குமே நனவாகும் கனவு. ஆனால் இன்னும் நான்கு வாரங்களில் நாசா அப்பல்லோவை நிலாவிற்கு அனுப்பப் போகிறது. இரண்டு விண்வெளி வீரர்களின் உயிர் மட்டுமல்ல, உலகஅரங்கில் அமெரிக்காவின் கௌரவமும் ஆலன் கையில் இருக்கிறது. குழுவின் முக்கிய அங்கம் அவன். திருமணத்திற்கே அரைமணிநேரம் இருக்கும் போது தான் வருகிறான். Will the marriage last long?
Workaholics எல்லோருக்குமே, அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் இந்தப் பிரச்சனை இருந்தே தீரும். அலுவலையும்,. குடும்பத்தையும் சமன் செய்வது என்பது சாதாரண விஷயமில்லை. மணவாழ்வை ஆரம்பிக்கும் பெண்கள் இயல்பாகவே So demanding. வெளியில் சாதனைபுரியும் எல்லா ஆண், பெண் சாதனையாளர்களின் குடும்பங்களில் செய்யப்படும் தியாகங்கள் பேசப்படுவதேயில்லை. “Sometimes the ones who make the sacrifices move the whole world forward out of darkness, into light.”