அம்புலிமாமா, காமிக்ஸ்க்குப் பிறகு நேரடியாக சமூகநாவலுக்கு வந்து விட்டேன்.
வரதராசனார், நா.பா படித்து வளர்பவர்கள், பெரியவராகி, பத்தரைமாற்று தங்கமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். நான் பித்தளையாகக்கூட ஆகவில்லை. பின்னர் ஆரம்பித்தது தான் தமிழ்திரில்லர் படிப்பது. புஷ்பா தங்கதுரையின் திரில்லர் கூடப் படித்திருக்கிறேன். சுஜாதா தான் இந்த உலகத்தில் சிறந்த திரில்லர் எழுதுகிறார் என்று திடமாக நம்பிய காலமது. S.S.L.C முடித்த பிறகே Chaseல் ஆங்கில வாசிப்புத் தொடங்கியது. அநேகமாக எல்லா Chase booksம் படித்ததாக நினைவு. ஒரு கணக்கிற்குச் சொன்னால் கிட்டத்தட்ட 90 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். Sydney Shelden, Irving Wallace, Ken Follett, Jeffrey Archer என்று படிக்கத் தொடங்கிய பின் எனக்குத் தெளிவாகியது ஒன்று, நூற்றுக்கணக்கான நல்ல எழுத்தாளர்கள் திரில்லருக்கு மட்டுமே இருக்கிறார்கள், ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நூல் படிப்பதென்பதே பெரிய விஷயம்.

இன்னும் கொஞ்சம் படிக்க ஆரம்பித்த பின் தெரிய வந்தது, என்னுடைய முந்தைய ஆதர்ஸமான சுஜாதா மின்னணுவியல் படித்தவர், அவருக்கும் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் அவரது கதாநாயகர்கள் துப்பறியும் வழக்கறிஞர்கள். மாறாக Legal thrillersஐ எழுதும் Steve Martini, John Grisham போன்றோர் சட்டம் படித்தவர்கள். Medical thriller எழுதும் Robin Cook அடிப்படையில் மருத்துவர். பிரேதப்பரிசோதனைகளைப் பற்றி அதிகம் எழுதிய Patricia Cornwell, Medical Examiner அலுவலகத்தில் சில காலம் வேலை செய்தவர். investment banker ஆனChristopher Reich, Stieg Larsson போன்றோரின் Financial thrillers. இது போல் துறை ரீதியாக திரில்லர்கள். நீங்கள் திரில்லர் வாசகராக இருந்தால், வாழ்க்கை முழுவதும் திரில்லர் ஜானரை மட்டுமே விடாமல் படித்தாலும் முடிக்க இயலாத எண்ணிக்கையில் திரில்லர் நூல்கள் உள்ளன. எந்த நூலை எடுத்தாலும் படுவேகமாகப் பறக்கும் மொழிநடையைக் கொண்ட Karin Slaughter மட்டுமே முப்பத்தைந்து நூல்களை எழுதியுள்ளார். அமெரிக்காவிற்குப் பின் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் என்று பல நாடுகளில் பிரபலமான திரில்லர் எழுத்தாளர்கள் இருக்கின்றனர்.

திரில்லர் நாவல்களுக்கும் நீண்ட ஆய்வு, Beta reading, எடிட்டர் முதலியபடிகளைக் கடக்காமல் நூல்கள் உருவாகுவதில்லை. அதனாலேயே அவை வாசிப்பதற்கு அவ்வளவு சுவாரசியமானவையாக இருக்கின்றன. ஆங்கிலத்தில், இன்னொரு விஷயம் அவர்கள் மொழியைப் பட்டைதீட்டிக் கொள்ள அரும்பாடுபடுவது. இன்றைய தினத்தில், சமீப காலங்களில் என்னைக் கவர்ந்த பத்து திரில்லர் நூல்களை நினைவில் இருந்து குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியலில் இன்னும் ஐந்து வருடங்களில் பாதிக்கும் மேல் இருக்கப்போவதில்லை என்ற அளவிற்குத் தரமான திரில்லர் நாவல்கள் இப்போது ஏராளமாக வர ஆரம்பித்துள்ளன.

  1. The Devotion of Suspect X by Keigo Higashino
  2. The Silent Patient by Alex Michaelides
  3. The Girl on the Train by Paula Hawkins
  4. Where the Crawdads Sing by Delia Owens
  5. Gone Girl by Gillian Flynn
  6. The Hypnotist by Lars Kepler
  7. Snap by Belinda Bauer
  8. The Wife Between Us by Greer Hendricks and Sarah Pekkanen.
  9. Home Before Dark by Riley Sagar
  10. Out by Natsuo Kirino

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s