பிரம்மதேசம் அத்தையின் வீட்டில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், பத்திரிகைகளில் இருந்து எடுத்து பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.பலரது வீடுகளில் நான் சிறுவனாக இருந்த போது அவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது படிக்கிறார்களோ இல்லையோ பளபளக்கும் Coffee table வடிவிலான புத்தகங்களே வரவேற்பறையில். கல்கி, சாண்டில்யன் முதலியோர் அறிமுகமானது பழைய பைண்டிங் புத்தகங்கள் மூலமே.

சாண்டில்யன் ஏராளமாக எழுதியிருந்தார், நானும் அவரை ஏராளமாகப் படித்திருந்தேன். இன்று நான் நினைவில் வைத்திருப்பது யவனராணியை மட்டுமே. கல்கியை இப்போது நினைக்கையில் (என்னால் கல்கியை நாற்பது வருடங்களாகப் படிக்க முடியவில்லை) மரியாதை தோன்றுகிறது. இன்டர்னெட் என்பது இல்லாத உலகத்தில் கதைகள் எழுதியவர். பொன்னியின் செல்வனில் சிறிய வரலாற்று தகவல்களை வைத்துக் கொண்டு சுவாரசியமான புதினத்தை எழுதியது, அடுத்ததாக அவருடைய கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, வெய்யிற்கேற்ற நிழலுண்டு பாடலில், சிவாஜி புலிநகம் கழுத்தில் ஆட, பார்க்கும் போது, கள்வனின் காதலி நாவல், முத்தையனை நான் கண்டேன். கடைசியாக வாசிப்பு வளர்ந்ததில் அவர் பங்கு கணிசமானது. சிறுவயதில் கல்கியை படித்து வளர்ந்த என்போல் பலர், வாசிப்பின் ருசியை மறக்கமுடியாமல் தொடர்ந்து சிறந்த உலக இலக்கியங்களை வாசித்தவர்கள். கே.என்.சிவராமன் நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார், அரு.ராமநாதனின் வீரப்பாண்டியன் மனைவியும் அப்போது நான் பலமுறை படித்த நூல். விக்கிரமன், அகிலன், ஸ்ரீவேணுகோபாலன் என்று பெரிய பட்டாளமே வரலாற்று நூல்களை எழுதினார்கள். முதன்முறையாக War and Peace வாசித்த போது, தேய்வழக்காக இருந்தாலும் பரவாயில்லை, திக்பிரமை அடைந்தேன். வரலாற்று நாவல்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்ற என்புரிதலை பல ஆங்கிலநூல்கள் மாற்றின. இளைய தலைமுறை வாசகர்களுக்கான வரலாற்று நூல்களின் பட்டியல் இன்றைய தேதிக்கு நினைவிலிருந்து. விடுபடல்களை நீங்கள் சேர்க்கலாம். வாசிக்காமல் இருந்தால் TBRல் சேர்த்துக் கொள்வேன். வாசிக்கப்படாமலேயே என்னிடம் ஐம்பதுக்கு மேல் வரலாற்றுப் புதினங்கள் இருக்கின்றன.

  1. War and Peace – Leo Tolstoy
  2. All the Light We Cannot See by Anthony Doerr
  3. The Nightingale by Kristin Hannah
  4. The Book Thief by Markus Zusak
  5. A Tale of Two Cities by Charles Dickens
  6. Shogun by James Clavell
  7. Beloved – Toni Morrison
  8. The Name of the Rose by Umberto Eco
  9. Things Fall Apartl by Chinua Achebe
  10. Alias Grace by Margaret Atwood

இதை எழுதும் போதே பல நூல்கள், எனக்கெங்கே இடம் என்று மன்றாடுகின்றன.
Historical Fiction மட்டுமே வாசிக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள். எந்த ஜானர் எடுத்தாலும் சார்லஸ் டிக்கன்ஸ் வந்து விடுவார் போலிருக்கிறது. நாவல்களில் என்றென்றைக்குமான மாஸ்டர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s