ஜப்பானில் இது ஒரு Transition period. பல நூற்றாண்டுகளாகவே ஜப்பானில் தற்கொலை என்பது மற்ற நாடுகளை விட அதிகமான ஒன்று. பண்டைய ஜப்பானில் Seppuku என்பது ஒரு Ritual. ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறப்பு வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. ஜப்பானியப் பள்ளிகளில் Bullying ஒரு பெரிய தொற்றுநோயாக அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் அழிவிற்குப் பிறகு மீண்டெழுந்த ஜப்பானில், இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

முரகாமியின் படைப்புகளில் வரும் ஜப்பான் அடர்பனிக்காலத்தில் தூரத்தில் வரும் வண்டியைப் பார்ப்பது போன்றது. அவரது யுத்திகளும், மேற்கத்திய கலாச்சாரக் கலப்பும் இதற்கு முக்கியமான காரணம். Nakamura, Ryu Murakami போன்ற ஆண் எழுத்தாளர்கள் பெரிதான Impactஐ உலகவாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஏராளமான பெண் மொழிபெயர்ப்பாளர்கள் வந்த பிறகு பெண்களின் படைப்புகள் உலக வாசகர்களால் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

  1. Mieko Kawakami – இன்றைய ஜப்பானியப் பெண்களை இவரது படைப்புகளில் அதிகமாகக் காணலாம். முதல் நாவல் Breast and Eggs அதில் குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த Heaven மிகவும் புகழ்பெற்ற நாவல். 2022ல் வெளிவந்த All the lovers in the night என்ற நாவலும் ஒரு வித்தியாசமான பெண்ணைப் பற்றியது. பெண் கதாபாத்திரங்கள் Kawakamiயால் உயிர் கொள்வார்கள்.
  2. Banana Yoshimoto: Kitchen என்ற நாவலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர். இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இவர் கதைகளில் அடிக்கடி வரும். சமீபத்தில் வந்த Dead end memories நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.
  3. Sayaka Murata- Convenience Store Woman என்ற முதல் நாவலின் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெற்றவர். அடுத்து வந்த Earrhlings நல்ல நூல். Life Ceremony என்ற புதிய சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளுமே ஒரு Alternate realityஐ உருவாக்குபவை.
  4. Hiroko Oyamada- The Hole, The Factory, Weasels in the Attic என்று மூன்று குறுநாவல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. மூன்றுமே ஒன்றுடன் ஒன்று போட்டியிடுபவை. மாஜிக்கல் ரியலிசத்தை மிக அழகாகப் பயன்படுத்தும் இன்றைய எழுத்தாளர்களில் ஒருவர்.
  5. Natsuo Kirino – Out எனும் நாவல் மிகப் பிரபலமானது. அமெரிக்கத் திரில்லர்களில் யுத்திகள், Details நிரம்பியிருக்கும். ஜப்பானியத் திரில்லர்களில் அவர்களது வாழ்க்கையின் அலைக்கழிப்பு கண்டிப்பாக இடம்பெறும். நான்கு பெண்கள் ஒரு கொலை , Out நாவல்.
  6. Yoko Tawada – Memoirs of a Polar Bear என்ற நாவல் மூலம் பரவலாக வாசகர்களைப் பெற்றவர். ஜப்பானிய மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் எழுதுபவர். இரண்டு கலாச்சாரங்களின் கூறுகளும் இவர் படைப்புகளில் கலந்திருக்கும்.
  7. Kyoko Nakajima- Things Remembered and Things Forgotten என்ற அபாரமான சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். நினைவுகளும், துயரமும் மனத்தை ஆக்கிரமிக்கும் கதைகள்.
  8. Ami Sakurai – Innocent world என்ற நூலின் மூலம் பிரபலமானவர். சிக்கலில்லாத Pure romance novel. இப்போது சினிமாக்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
  9. Yoko Ogawa – முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் The Memory Police புக்கர் மற்றும் NBA இறுதிப்பட்டியல்களில் ஒரே வருடத்தில் வந்த பின்னர் இவரது வாசகர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து விட்டது.
  10. Kanae Minato – Penance, Confession என்ற இவரது இரண்டு நாவல்கள் முக்கியமானவை. கடிதங்கள் மூலம் நகரும் நாவல்கள். திரில்லர் எழுத்தாளரான இவரது நாவல்கள் பல ஆங்கிலத்தில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேற்குறிப்பிட்ட நூல்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர் என் பழைய பதிவுகளைப் பார்க்கலாம். ஜப்பானிய இலக்கியத்தில் இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் மட்டும் என்று சொன்னால், சீரியஸ் இலக்கியத்தில் Haruki Murakamiஐயும் திரில்லரில் Keigo Higashinoஐயும் சொல்வேன். இருவரும் மாஸ்டர்கள். Higashinoவின் புதியநூல் இம்மாதம் 15ல் வருகிறது. Preorder செய்தாகி விட்டது. பெண்களுக்கு செய்யாத காத்திருப்பையெல்லாம் புத்தகங்களுக்குச் செய்யும் வாழ்க்கையாகிவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s