ஆசிரியர் குறிப்பு :
சென்னையில் பிறந்து அங்கேயே வசிப்பவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஏழு மொழிபெயர்ப்புகள் இதுவரை வெளிவந்த இவரது நூல்கள். இது இவரது எட்டாவது மொழிபெயர்ப்பு நூல்.
தேசிக்கு அவளது சித்தி வீட்டை மட்டுமின்றி நாட்குறிப்புகளையும், சில புத்தகங்களையும் விட்டுச் சென்றிருக்கிறாள். ஏராளமான பேப்பர், புத்தகங்களை பின்னறையில் போட்டு வைத்த தேசி, கிட்டத்தட்ட அவற்றைக் குப்பையில் எறிந்திருக்கக்கூடும். யதேச்சையாக ஒரு சில பக்கங்களைப் படித்தபிறகே அது சித்தி கேத்தின் கதை என்பது தெரிகிறது. ஒரு பாலின உறவு ஈடுபாட்டிற்காக சித்திரவதை செய்யப்பட்ட கேத்தின் கதை. அதுவே இந்த நாவல்.
கேத் எழுத்தாளர். கவிஞர். கிரேக்க மற்றும் இந்தியப்புராணங்களில் தேர்ச்சி பெற்றவர். மெர்சிடிஸ் திரைப்பட இயக்குனர். வேறொரு சூழலில் அவர்களது வாழ்க்கை வேறுவிதமாக ஆவணப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இருவரும் இருந்த வீட்டில், மிகஅதிகாலை நேரமொன்றில் மெர்சிடிஸ் சுடப்பட்டுத் தரையில் விழுகிறாள். கேத் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, மாதக்கணக்கில் பலவிதமான சித்திரவதைகளுக்கும், பல ஆண்களின் தொடர் வல்லுறவுகளுக்கும் உள்ளாகிறாள். அவை அவளது ஒருபாலின ஈர்ப்பை மாற்ற வல்லதா? அவர்களுக்குத் தெரியாதது, கேத் ஒரு எழுத்தாளர், வலிகள், வன்கொடுமைகளைத் தாண்டி அவளது மூளையின் சிறுமடிப்புகளில் தகவல்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன என்பது.
நாட்குறிப்புகளில் இருந்து நாவலை உருவாக்குவது பழைய யுத்தி. ஆனால் அது இன்றும் ஒரு வெற்றிகரமான பார்முலா. தன்மையில் சொல்லப்படும் கதை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம், நாட்குறிப்புக் கதைகளில் அதிகம். கடிதங்கள், கவிதைகள், நாட்குறிப்புப் பகுதிகள், தேசி கண்டடைதல்கள் ஆகியவற்றின் மூலம் கதை நகர்கிறது. நேர்க்கோட்டில் நகரும் கதையல்ல இது, ஒருங்கிணைவில்லாத சிதறல்கள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தும் முயற்சி இந்த நாவல். வேண்டுமென்றே சொல்லப்படாத தகவல்களும் இதில் நிறையவே உண்டு.
கடைசி பக்கத்திற்குள் கதை முழுதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பும் அன்பர்களுக்கான நாவலல்ல இது.
சூசன் ஹாதோர்ன்-கேத் இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ஒரு பாலின உறவுக்காரர்கள். இருவருமே கிரேக்க, இந்திய புராணங்களில் பரிட்சயம் உள்ளவர்கள். Lesbians மீது தாக்குதல்களும் பலமுறை உண்மையிலேயே நடந்தது தான். ஆகையினால் சூசன் ஹாதோர்னால் எளிதாக கேத்தின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய முடிந்திருக்கிறது.
சமீபத்தில் புக்கர் பட்டியல்களில் வெளியான Elena Knows, Small things like these போலவே இந்த நாவலும் ஒரு Ficto-critisim தான். சூசன் ஹாதோர்னால் எளிதாக கேத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். அத்துடன் இது குறித்த பல நூல்கள் (பின்னிணைப்பில் உள்ளது), தாக்குதல்கள் குறித்த ஆய்வுகள் முதலியவற்றை செய்திருக்கிறார். 2002ல் எழுத ஆரம்பித்த நாவல், 2017ல் வெளியாகி இருக்கிறது.
இந்த நாவலில் கவிதைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. தற்செயலாக அமைந்ததா இல்லை தேடிச்சென்றதா தெரியவில்லை, சசிகலாவும் அடிப்படையில் கவிஞர். அது கவிதைகள் மொழிபெயர்ப்பிற்கு அவருக்குப் பெரிதும் உதவியிருக்கக்கூடும். தேசி அவளது சித்தி கேத்தைப் புரிந்து கொள்ளத் திணறுகிறாள். சித்தி விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் வரிசைக்கிரமமாக இல்லை. ஆகவே நாவலும் Fragmented events ( Chronological dates வந்த போதிலும்), மற்றும் எதற்காக, யாரால் Lesbians மீதான Organised crime நடத்தப்படுகிறது? எந்தகாலகட்டத்தில்? என்பது போன்ற பல தகவல்கள் மறைக்கப்பட்டிக்கின்றன. இது போன்ற பாரம்பரியத்தில் இருந்து விலகிய நாவல் வடிவத்தை சசிகலா பாபு தன் சரளமான மொழிபெயர்ப்பினால் திறம்பட செய்திருக்கிறார். தமிழில் நாவல்வடிவத்தைப் பற்றி இருக்கும் Mythஐ உடைக்க இது போன்ற பல நாவல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். நீண்ட காலம் கழித்து சந்தித்த காதலர்கள் சொல்கிறார்கள் ” இப்படியெல்லாம் நடந்திருக்காமலிருக்கக்கூடாதா?”. நாமும் கூட வாழ்க்கையில் இதையே எத்தனை முறை சொல்லியிருப்போம்!
பிரதிக்கு :
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
Amazon.in for kindle version
முதல்பதிப்பு டிசம்பர் 2022
அச்சுப்பதிப்பு விலை ரூ. 325
மின்னூல் விலை ரூ.257.