யாதவப் பிரகாசர் – சரவணன் சந்திரன்:
ஹாக்கி விளையாட்டின் நுணுக்கங்களை மையமாகக் கொண்ட கதை. வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால் குருவுக்கு சீடனின் திறமை தெரிந்து போகிறது. குரு சற்றே பாதையிலிருந்து கீழிறங்கி விட்டு, மீண்டும் பிரதானசாலைக்கு வந்து சேர்வது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தக்கையின் மீது நான்கு கண்கள் தாத்தா நினைவுக்கு வருகிறார்.
அனாகதநாதம் – செந்தில் ஜெகன்நாதன்:
விரும்பிய பெண்ணின் மீது ஏற்படும் disenchantment அப்படியே நாதஸ்வரத்திற்கு மாறிவிடுகிறது. காணுமிடமெங்கும் அவள் சிரிப்பு என்பது போல் எங்கு சென்றாலும் நாதஸ்வர இசை விடாமல் கேட்கிறது. கடைசியாக மரபணுக்கள் அதன் வேலையைச் செய்கின்றன. இசையின் நுணுக்கங்களைச் சேர்த்து வரும் கதை. செந்திலின் மொழிநடை அழகு.
அந்தக் கிச்சிலி மரத்தடியில் – கமலதேவி:
எப்போதும் தேடலில் தொலைபவர்களுக்கான உலகம் இதுவல்ல. சிறுவயதில் இருந்தே தீராத தேடலில் இருக்கும் ஒருவனின் முடிவு வரையான கதை இது. மதங்கள் இதைத் தான் பேச வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்தது பல நூற்றாண்டுகள் இருந்திருக்கிறது. கமலதேவியின் மொழிநடை இந்தக் கதையில் அழகாக, பாடல் போல் வந்திருக்கிறது.