பிறழ்வு – அரவிந்த் வடசேரி:
வேட்டை மனநிலையில் இருப்பவன் பற்றிய கதை. எப்போதுமே கையிலிருப்பது கவர்ச்சியாக இருப்பதில்லை. காப்பிக்கலர் புடவை பணத்திற்குக் கிடைப்பவள் என்று தெரிந்ததுமே காமம் வடிந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரம் முக்கியமானது. அவனது அத்தனை தேடல்களிலுமிருந்து விலகி எதிர்துருவத்தில் இருக்கும் பெண். எந்தவித ஆரவாரமுமில்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் கதை. நன்றாக வந்துள்ளது அரவிந்த். வாழ்த்துகள்.
கும்பசாரம் – கு.கு.விக்டர் பிரின்ஸ்:
Who dun it சிறுகதை. சிறுவன் மூலமாக உண்மை தெரிய வருகிறது. ஒன்பது வயது சிறுவனிடம் இந்த விஷயத்தை யாரேனும் சொல்வார்களா! காவல் நிலைய விசாரணை, கேட்பதற்கு ஆள் இல்லா விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள், ரவுடிகள் காவல்நிலையத்தில் நாட்டாமை செய்வது என்று எல்லாமே நாட்டு நடப்பின் படி வந்திருக்கிறது. ராஜேஸ்வரியைப் பற்றித் தான் யோசித்தேன். வெளியில் கரடுமுரடாக இருக்கும் எல்லாப்பெண்ணுக்குள்ளும் மென்மையான பெண்ணொருத்தி அடங்கி இருப்பது உண்மை.
கதையும் காலமும் – லாவண்யா சுந்தரராஜன்:
மகாபாரதத்தில் VIPகள் உயிர்பிழைக்க சாமானியரைப் பலிகொடுத்தல் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி. நிஷாதப்பெண்ணும், மைந்தர்களும் மரணிப்பது போல. கிருஷ்ணனுக்கு பதில் சென்ற யசோதாவின் புத்திரி ஒருவேளை யசோதாவிற்குத் தெரியாமல் போயிருந்தால் என்ற கற்பனையில் முதல்கதை. இரண்டாம் கதையில் அதே கதாபாத்திரங்கள் In vitro fertilization தவறில் ஏமாறுகிறார்கள். வழக்கத்திற்கு மாறாக முதல்கதை Powerful ஆகவும் (Forget the language style) இரண்டாம் கதை மாற்று கம்மியாகவும் வந்திருக்கிறது. இரண்டாவது கதை சிறந்த கதையாக வரும் சாத்தியமிருக்கும் கரு.
ஐமவதி – G P சத்யா:
நாட்குறிப்புகள், வாட்ஸப் நோட்களிலிருந்து சொல்லப்படும் கதை. ஜானு-ரவி கதையைச் சொல்ல கொஞ்சம் சுற்றி வளைப்பது போல் இல்லையா?
சீமந்தம் – கன்னட மூலம் H.நாகவேணி – தமிழ் மொழிபெயர்ப்பு அனுராதா கிருஷ்ணசாமி:
சீமந்தம் வாரமலர் கதை. அனுராதாவின் நல்ல மொழிபெயர்ப்பும், உழைப்பும் புல்லுக்குப் பாய்ந்திருக்கிறது.
https://drive.google.com/file/d/1HlIjBssFjxDRrhDhBDE1Lnnk4GksWXXT/view