உறவு – கமலதேவி:
பால்கொடுக்கும் மார்பில் வெடிப்பு வந்தால் குழந்தைக்கும் கொடுக்கமுடியாது, மார்கட்டிக் கொண்டு, தொடவே முடியாமல் நரகவேதனை. அதுவே வாய்பேசத்தெரியாத ஜீவனுக்கு வந்தால்! மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவு பற்றிய கதை, வெகு இயல்பாக ஒரு குடும்பத்தைக் கண்முன் கொண்டு வருகிறது. நாராயணனுக்கும் மாட்டுக்குமிருக்கும் உறவு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பது போன்றது. அம்மா,மகள்இருவரிடம் மட்டுமே ஒரு ஆணால் காட்ட முடிவது. அழகாக மலர்ந்திருக்கிறது.
எக்ஸ்- அகராதி:
எக்ஸ்ஸூடன் பெரும்பாலும் பார்த்தாலும் பேசாமல் தலையைத் திருப்பிக் கொள்ளும்படி கசந்து போகிறது. ஒருவேளை மீண்டும் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தால்? அப்போது ஆணின் மனநிலை வேறு, பெண்ணின் மனநிலை வேறு. அது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்தக் கதையில்.
அமாசா – தேவனூரு மகாதேவா – கன்னடத்தில் இருந்து தமிழில் தி.இரா.மீனா:
Penguin Book of modern short stories தொகுப்பில் உள்ள ஒரு கதை. தலித் மக்களின் இருப்பே எப்படி உயர்ஜாதியினரின் கண்முன் தெரியாது மறைந்து விடுகிறது என்பதைச் சொல்லும் கதை. இந்தக் கதையில் புலியாட்டம் முக்கியமானது. மூலக்கதையில் ” அவர்களின் மனைவிகளின் ஆடைகளைக் களையும் போதும் புலியாட்டம் கண்முன் வந்து கொண்டே இருந்தது” என்பதில் ஒரு முக்கியமான செய்தியுள்ளது. மொழிபெயர்ப்பில் ஆடைகளைதல் என்பது அவசரமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பில் மாற்றங்கள், விடுதல்கள் செய்ய யாருக்கும் உரிமையில்லை. பெண்களுக்கும் தான்.
எல்லாம் நல்லபடியா நடக்குமுங்க – வா.மு.கோமு:
முதிர்கன்னிக்கு எதிர்ப்பதம் என்ன? அவனது சோகக்கதை. A slip between the cup and the lip.
கல்வளைக் கை – கார்த்திகா முகுந்த்:
சிறுவயதில் கள்ளமில்லாமல் எல்லோரிடமும் எப்படி நெருங்கிப் பழகுகிறோம். வயதாக ஆக ஒரு விலக்கம் வந்து விடுகிறது. கமலி ஆச்சியை ஒதுக்கி வைக்க கணவன் இல்லாதது, பையன் தறுதலையாய் திரிவது காரணங்களாக இருக்கலாம். அது குழந்தைக்குக் கடைசிவரை தெரிவதேயில்லை. ஆனால் முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பழைய நாட்களை மீட்டெடுக்க முடிவதென்பது பாக்கியம், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கார்த்திகா உண்மையில் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் செய்தது போல் இருக்கிறது கதையை வாசிப்பதற்கு. Watch Karthika Mukundh.
நான் சாப்பிட்ட பசி – எஸ்.செந்தில்குமார்:
முதல் அத்தியாயம் ஒரு ப்ளாஷ்பேக் போல ஆரம்பித்து, இரண்டாம் அத்தியாயத்தில் பாதை மாற ஆரம்பிக்கிறது. சற்குணம் பெற்றோர் பாசத்திற்கு ஏங்கும் அத்தியாயத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். மற்றபடி Perfect story. மனம் செய்யும் மாயங்கள்.
பிரதிக்கு
WSP 90940 05600