சிற்பன் – அகராதி:
ஃபாண்டஸி கதை. “இரு தினங்கள் படகு ஓட்டி…..” என்பது போன்ற இடங்களில் அகராதி தெரிகிறார். கதை Impressive ஆக வரவில்லை.
உடல்-உயிர்-உணர்வு – மஞ்சுநாத்:
முதலில் வருபவரும் இடையில் வருபவரும் கடைசியில் வருபவரும் ஒரே நபர். கதை துண்டுதுண்டாகச் சொல்லப்படும் யுத்தி. கதைக்கரு இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
சிறு குடி – கி.தெ. மொப்பஸான் – தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்:
பேராசையும் மோசம் செய்தலும் இந்தக் கதையின் தீம்கள். ஆரம்பத்திலேயே இது தான் நடக்கும் என்று எளிதில் யூகிக்கக்கூடிய கதை. மதுவை ஒருவரைக் கெடுக்க உபயோகிப்பது என்பதும் காலங்காலமாக நடப்பது. முதலாளித்துவமே வெல்லும் என்கிறாரா மொப்பஸான்! நல்ல மொழிபெயர்ப்பு.
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த பத்து கற்பனைகள் – சுஜித் லெனின்:
பாத்திரத்தின் வடிவத்திற்கேற்ப மாறும் தண்ணீரின் வடிவம். ஒரு ஆணுக்கு அழகிய பெண்ணைப் பார்க்கும் போது ஏற்படும் வேகமான இதயத்துடிப்பு, இன்னொரு பெண்ணுக்கு ஏற்படுவதில்லை. Preception தான் நம் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது என்பதற்கான பத்து பிரபஞ்சங்கள்.
மேஜிக் கலைஞன் – சத்யஜித் ரே- தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி:
ரேயின் பெரும்பாலான கதைகளில் அமானுஷ்யம் கலந்திருக்கும். வார்த்தைகள் அனாவசியமாக இறைக்கப்படுவதில்லை.
கதைக்கருவும் அழுத்தமாக அமைந்திருக்கும். ஏகலைவன் போல் குருவிடம் இருந்து வித்தையைக் கற்றுக் கொள்ளும் மேஜிக் நிபுணர். நல்ல கதை. எளிமையான, அழகான மொழிபெயர்ப்பு.
நீங்க யாரையாச்சிம் காதல் பண்ணியிருக்கீங்களா -வா.மு.கோமு:
அரைகுறை படிப்புக்காரன் செய்யும் அத்தனை கூத்தும் இந்தக் கதையில் வந்திருக்கின்றன. இவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. கதையினூடே சென்னிமலையில் ஒரு தொழில் நசிந்ததும் கலந்து வருகிறது. மாற்றங்கள் எத்தனை நடந்தாலும் மாறாதது எப்போதும் அரைகுறை வாசகர்கள் தான்.
கரும்பாறையும் மனசாட்சியும் – குமரகுரு அன்பு:
சிறார் கதை எனக் குறிப்பிடப்படாமல் வந்திருக்கிறது. எந்த நேரமும் தவளை வந்து முத்தம் கொடுக்கச் சொல்லி அழகிய இளவரசியாக மாறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.
பிரதிக்கு:
அகநாழிகை 70101 39184