Rebecca ஹங்கேரியைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்க எழுத்தாளர். Rebeccaவின் முந்தைய நாவல் ஒன்று புலிட்சர் மற்றும் NBA
இரண்டின் இறுதிப்பட்டியல்களிலும் இடம்பெற்றதால் இவர் பெரும்பாலோருக்கு அறிமுகமான எழுத்தாளர். இந்த நாவல் 23 February 2023ல் வெளியானது.

Bodie ஒரு திரைத்தயாரிப்பாளர், Podcaster. ஹாலிவுட் நடிகைகளைப்பற்றி Podcasting செய்ததால் பிரபலமானவர். அவரை Granby என்ற Elite Boarding பள்ளியில் Podcasting குறித்து இரண்டு வாரங்கள் வகுப்பெடுக்க அழைப்பு வருகிறது. Granby School Bodieக்குப் புதிதானதல்ல. இருபது வருடங்கள் முன்னர் அங்கு தான் நான்கு வருடங்கள் படித்தார். அது மட்டுமல்ல 1995ல் பள்ளிக்குள் நடந்த, பள்ளியின் அழகி, பதினேழு வயதுப்பெண்ணின் கொலை இத்தனை வருடங்கள் கழித்தும் Bodieஐத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. மாணவர்களின் Live Projectக்கு அந்தக் கொலையையே Podcasting project ஆக மாற்றுகிறார் Bodie. ஏற்கனவே கொலை செய்ததாகத் தண்டிக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல், சிறையில் இருக்கும் (தண்டனைக் காலம் அறுபது வருடங்கள்) ஒமர் ஒருவேளை அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றால்? இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தப் பள்ளி மாணவர்களின் Class Project வேறொரு முக்கியமான தடயத்தைக் கண்டுபிடிக்கும் என்றால்?

கும்பல் மனப்பான்மை என்பது எங்கேயும், எப்போதும் ஒன்று தான். ஒமர் Athelete பயிற்சியாளர், கறுப்பர், பள்ளியில் நேரடியாகப் பணிபுரியாதவர். எனவே ஒருவர் சொல்லியதும் எல்லோருமே அதனைப் பின்பற்றி ஒமர் மீது பழிபோடுகிறார்கள். காவல்துறைக்கும் எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய குற்றவாளி கிடைத்ததால் File close செய்து வேறு வேலை பார்க்கலாம். ஒமரின் Athelete Body இருபத்தேழு வருட சிறைவாசத்தில், தலையைத் திருப்ப, உடல் மொத்தமும் திருப்புகின்ற உடல் ஆகிறது.

Boarding schoolகள் இரகசியங்களை நான்கு சுவர்களுக்குள் மறைப்பவை என்பது தெரிந்ததே. ஆனால் இரண்டு பெண்களின் மார்பகங்களை ஒவ்வொரு கையிலும் இறுகப் பற்றித் திருகுவது, காமிராவைப் பெண்ணுக்குத் தெரியாமல் Set செய்து, நண்பர்கள் எல்லோரையும் பார்க்கச் சொல்லி விட்டு உறவு கொள்வது, பெண்ணின் தலையை வலுக்கட்டாயமாக இழுத்துப் BJ செய்ய வைப்பது என்பதெல்லாம் பதினைந்து, பதினாறு வயதுக்கு அதிகப்படியான பாலியல் அத்துமீறல்கள் இல்லையா! Rebecca இது போன்ற Boarding பள்ளியில் படித்தவர்.

சட்டம் என்பது எல்லோருக்கும் சமமானது இல்லை. பணம் இருப்போர் வைத்துக் கொள்ளும் Bunch of lawyers வசதி எளியோருக்கு இருப்பதில்லை. Retrial என்பது, அதுவும் இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் மிகக் கடினமானது. சாட்சிகளில் சிலர் உயிருடன் இருப்பதில்லை, பலருக்கு நினைவு இருப்பதில்லை.

சமூகவலைத்தளங்கள் ஒரு Character assasinationஐ எவ்வளவு உணர்வுபூர்வமாக நடத்தமுடியும் என்பது நாம் பலமுறைப் பார்த்தது. Jeromeக்கு 31வயது, Jasmineக்கு பதினெட்டு. இருபது வருடங்களுக்குப் பின்
Jasmine குற்றம்சாட்டுவது அதிகாலையில் உறவுகொள்வது எனக்குப் பிடிக்காது, ஆனால் Jeromeக்காக வேறு வழியில்லாது செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு Pork பிடிக்காது என்று தெரிந்து அதையே ஆர்டர் செய்தான் Jerome. பதினெட்டு Consensual Sexக்கு சட்டபூர்வமான வயது. வயது வித்தியாசத்தைக் காட்டி, இத்தனை வருடங்கள் கடந்து Jasmine victim card play செய்வதை சமூகவலைதளம் ஏற்றுக் கொண்டு பேராதரவு செய்கிறது. எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் சொல்வதற்குக் கருத்து இருக்கின்றது.

இறுதியாக Bodie கதாபாத்திரம். Rebecca, Bodie நானில்லை என்று பின்னுரையில் குறிப்பிட்ட போதும்கூட, ஒரு பெண்ணைத் தவிர அந்தக் கதாபாத்திரத்தின் உள்ளே இவ்வளவு ஆழம் வேறு யாராலும் போயிருக்க முடியாது. Bodieன் Flaws, Fantasies, Urges, Determination, weaknesses என எல்லாமே அழகாகப் பதிவாகி இருக்கின்றன. ஓரிடத்தில் Bodie சொல்வாள் ‘ என்னுடைய பெரிய பலவீனம், நெருங்கியவர்களின் குறைகளை மறைத்து அவர்களை Protect செய்வது”

Rebecca இந்த நூலின் மூலம் பரவலான புகழ் பெறப் போகிறார். Whodunnit என்று இதனை சுருக்க முடியாது. ஒரு இலக்கியத்திற்கு வேண்டிய எல்லா அம்சங்களும் இதில் இருக்கின்றன. Public Defenders, தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரது உதவிகளை இந்த நாவலுக்காகக் கோரியிருக்கிறார் Rebecca. True crime fiction எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இந்த நாவலை உதாரணம் காட்டலாம் (இது True crime அல்ல). நாவல் ஒருவரது பெயரைத் தாங்கி வந்தாலும், பலரது உழைப்பு அதன்பின்னே இருக்கிறது மேலைநாட்டு படைப்புகளில். இங்கே எழுத்தாளர் என்பவர் இருபதுமாதங்கள் கர்ப்பத்தில் இருந்தவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு, எழுத ஆரம்பித்து, தனியே எழுதிமுடித்து, அச்சுக்கும் கொடுத்துப் புத்தகங்களுடன் புகைப்படங்களைப் போடுகிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s