அலெக்ஸ் ஆங்கிலேய எழுத்தாளர். இங்கிலாந்தில் பிறந்து அங்கேயே வசிப்பவர். இப்போது இங்கிலாந்தில் எழுதிக் கொண்டிருக்கும் Crime Writersல் முக்கியமானவர்களில் ஒருவர். இவரை இதுவரை வாசிக்காதவர்கள் Whisper Manல் ஆரம்பிக்கலாம். இந்த நாவல் 28 பிப்ரவரி 2023 அன்று வெளியானது.

எதிர்காலம் என்பது நம்மால் கணிக்க முடியாதது. அதன் காரணமாகவே வாழ்தலில் ஒரு எதிர்பார்ப்பும், சுவாரசியமும் அடங்கியிருக்கிறது. இன்றிலிருந்து சரியாக இரண்டாவது வருடம் பிறக்கையில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவன் எப்படி மீதிநாளை நிம்மதியாகக் கழிக்க முடியும். முடிவு தெரிந்தவன் மதங்களை, கடவுளை நம்பப் போவதில்லை. எதிர்காலத்தைக் கணிப்பதை மையமாகக் கொண்ட நாவல் இது.

எதிர்காலத்தைக் கணிப்பது சில நேரங்களில் எளிதானது. உங்கள் தங்கையின் கணவர், மாத ஊதியக்காரருக்கு திடீரென்று வேலை போனால், நீங்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். விரைவில் உங்கள் தங்கை உங்களைக் கூப்பிடப்போகிறாள். Katie பள்ளி இறுதியை முடிக்கப்போகிறாள். அவளும் அவள் நண்பனும் வேறுவேறு கல்லூரிக்குச் செல்லப் போகிறார்கள். ஒருவேளை அது நிரந்தரப்பிரிவுக்கு வழிவகுக்கலாம். இப்போது அவளது நண்பன் Sam ஒருமணிநேரம் அவனது வீட்டில் யாருமில்லை, போகலாம் என்கிறான். Katieன் பெற்றோர் அவளது தம்பியை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டில் ஒன்றையே Katie செய்ய முடியும். Katie நண்பனுடன் செல்கிறாள். அடையாளம் தெரியாத மனநோயாளி ஒருவன் Katieன் தம்பி தெருவில் தனியாக வருகையில் கத்தியால் தாக்குகிறான்.

தன்னை மீறிய ஒன்றுக்குத் தான் பழி ஏற்றுக் கொள்வது ஆண்களை விட பெண்களே அதிகம் என்று தோன்றுகிறது. Katieன்தம்பி பிழைத்துக் கொள்கிறான். ஆனால் Drug addict, shop lifter ஆகிறான். அவன் வாழ்க்கை தடம் புரண்டதற்குத் தானே காரணம் என்று வருந்துகிறாள் Katie. இந்த நேரத்தில் அவளது தம்பியின் உயிருக்கு ஆபத்து என்பது Katieக்குத் தெரிய வருகிறது. ஒருபுறம் குழந்தை, நண்பனாகப் பழகி கணவனாக மாறிய Sam, அமைதியான வாழ்க்கை, இன்னொருபுறம் தம்பியின் உயிர். Katieன் வாழ்க்கையில் மற்றுமொருமுறை அவள் Choose செய்ய வேண்டும்.

பொதுவாக திரில்லர் நாவல்களில் ஒரு கதாபாத்திரம், அதன் பிரச்சனை என்பதையே மையமாகக் கொண்டிருக்கும். இதில் பல கதாபாத்திரங்களின் பிரச்சனைகள், அவர்களைத் தொடர்ந்து நாவல் செல்வது என்றிருந்தாலும் , வேகம் குறையாது செல்வது முக்கியமான விஷயம். அடுத்ததாக, அலெக்ஸ் தத்துவம் படித்த மாணவர். அதனால் தத்துவம் ஏராளமாக இந்த நாவலில் வந்திருக்கிறது. கடைசியாக Whisper Man போலவே இதிலும் மெலிதாக Super natural element வந்திருக்கிறது. ஆனால் அதை நாம் Scientific ஆன உண்மை என்றும் நிரூபிக்க முடியும்.

அலெக்ஸின் நூல்கள் மில்லியனில் விற்கின்றன. திரில்லர் வாசகர் நடுவே மிகவும் தெரிந்த பெயர் இவருடையது. பின்னுரையில் அலெக்ஸ் சொல்கிறார்.
‘ என்னுடைய USஎடிட்டரும், UK எடிட்டரும் சேர்ந்து, இப்புத்தகத்தில் நான் செய்த தவறுகள் அனைத்தையும் சரிப்படுத்திக் கொடுத்து விட்டார்கள்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s