Adichi இன்று எழுதிக் கொண்டிருக்கும், எழுத்தாளர்களில், உலகெங்கிலும் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். Creative Writingல் முதுகலை, பல பல்கலைகளில் இருந்து கௌரவடாக்டர் பட்டம் பெற்றவர் Adichi. மூன்று நாவல்கள், மூன்று அல்புனைவுகள், மூன்று Short fictions எழுதியுள்ள Adichiயின் மாஸ்டர்பீஸாகக் கருதப்படுவது இந்த நாவல்.

நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. எல்லா நாடுகளிலும் செய்ததைப் போலவே, நைஜீரியாவிலும் இரு இனங்களுக்கு இடையே ( Hausa & Igbo) தீராத பகையை உருவாக்கிவிட்டு ஆங்கிலேயர்கள் கிளம்பி விடுகிறார்கள். காலனி ஆதிக்கம் முடிவுற்றதும் இனப்போர் தொடங்கி விடுகிறது. நைஜீரியாவில் இருந்து பிரிந்து, Biafra என்ற புது நாடு உருவாக்கப்பட்டு, மூன்றாண்டுக்குள் கடும் பஞ்சத்திலும், போரிலும் ஏராளமானவர் இறக்க Biafra நைஜீரியாவுடன் மீண்டும் இணைக்கப்படுகிறது. Biafraவின் தேசியக்கொடி Half of the Yellow Sun.

நைஜீரியாவில் பணமும், செல்வாக்கும் மிகுந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, இரட்டையராகிய சகோதரிகள், அவர்களது குடும்பத்துடன் இந்த உள்நாட்டுப் போரின் இடையில் சிக்கிக் கொள்வதே நாவல். அவர்களது கதையுடன் Biafra என்ற அற்பஆயுள் கொண்ட தேசத்தின் கதையும் சொல்லப்படுகிறது. ஒரு சகோதரியின் கணவன், புரட்சிகர சிந்தனைகள் கொண்ட கல்வியாளர், இன்னொரு சகோதரியின் கணவன் வெள்ளையனாக இருந்த போதிலும் தன்னை ஒரு Biafranஆக உணர்பவன். பெற்றோர் இருவரும் லண்டன் தப்பிச்சென்ற போதும் சகோதரிகளின் குடும்பங்கள் Biafraவிலேயே தங்கி விடுகின்றன.

Olanna பிரதான கதைசொல்லிகளில் ஒருவர்.
Olannaவின் மேற்கத்திய பாணி வளர்ப்பு, ,நுனிநாக்கு ஆங்கிலம் எல்லாவற்றையும் தாண்டி, ,அவளிடம் இந்தியப் பெண்ணின் சாயல் தெரிகிறது. கணவன் வேலைக்காரப்பெண்ணிடம் சாவியைக் கொடுக்கையில் கைவிரல்கள் படக்கூடாது என்று கவனமாகக் கொடுக்கையில் அவர்களுக்கிடையேயான உடல்உறவைக் கண்டுபிடிப்பது, கணவனுக்கும் அடுத்த பெண்ணுக்கும் பிறந்த குழந்தையைத் தேடிச்சென்று தூக்கிவந்து தான் வளர்ப்பது, அவளது அப்பாவுடன் அவருடைய Paramour குறித்துப் பேசுவது என்று Olanna இதைத் தான் செய்வாள் என்பது யூகிக்க முடிகிறது.

மாறாக அவளது சகோதரி Kainene, totally unpredictable. ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம், வித்தியாசமான கோணத்தில் உலகைப் பார்ப்பது என்று சக்திவாய்ந்த ஆனால் இது தான் செய்வாள் என்று யூகிக்க முடியாத கதாபாத்திரம். ரிச்சர்டை மன்னிப்பது தொடங்கி, வேலைக்காரப் பையனின் தலை மட்டும் Shellல் பிய்த்துக் கொண்டு போக, உடல் தொடர்ந்து ஓடுவதை நினைத்து அழுவது, சமூக சேவகியாக,.விவசாயியாக, காப்பாளராக அவள் போரின் இடையே மாறுவது பணத்தைத் துரத்திய அதே பெண்ணின் மனமாற்றம். போர்வீரனை அடியில் இருந்து காப்பாற்றி உணவளித்து அனுப்புவது, பட்டினியில் இருக்கும் சிறுமிகளுக்கு உணவு தருகிறேன் என்று ஆசைகாட்டி கர்ப்பமாக்கும் பாதிரியை நெஞ்சில் கைவைத்துத் தள்ளி ஊரைவிட்டு விரட்டுவது என்று Kaineneக்குள் எப்போதும் இருவேறு பெண்கள்.

போர் என்பது எப்போதும் அழிவு தான். பெரும்பான்மையாய் இருப்பவர்கள் வெல்வதும், எப்போதும் எல்லாக் கடவுளர்களும் அவர்கள் பக்கம் இருப்பதும், அவர்கள் சொல்வதே வரலாறு ஆவதும் திரும்பத்திரும்ப நடப்பவை. போரின் சகலவிதமான கொடூரங்களும் நாவலில் தெளிவாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மதுக்கடையில் நடக்கும் நிகழ்வு முக்கியமானது. எல்லா ராணுவங்களுமே அப்பாவிப் பெண்களிடம் அப்படி நடந்து கொள்வது ஒரு கும்பல்மனப்பான்மையும், குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்ற தைரியமும் தான். Ugwuவின் தங்கையை Gangrape செய்வதும் அதனாலேயே.

Ugwuவும் ஒரு முக்கியமான கதைசொல்லி. கிராமத்தில் இருந்து வீட்டு வேலைக்கு வந்த பதின்மவயது சிறுவனின் பாலியல் வேட்கை அரும்புவதையும், அறியாமையையும் போர் கவிழ்த்துப் போடுகிறது. மூன்று வருடங்களில் Ugwu மனதளவிலும் வேகமாக வளர்ந்து விடுகிறான். அறிந்து கொள்வதையும் விட, பாரில் இருந்த அந்தப்பெண்ணின் வெறுப்பு நிறைந்த கண்களை அவன் இறக்கும் வரை மறக்கப் போவதில்லை. A right man in the wrong place.

வரலாற்று நாவல் இது. புனைவு எவ்வளவு இருக்கிறதோ அதேயளவு உண்மை நிகழ்வுகளும், மனிதர்களும் இருக்கிறார்கள்.
வரலாற்று நாவலில் அதிகமாக Facts கலக்கும் போது அல்புனைவின் சாயல் ஆகிவிடுகிறது. அதிகமான புனைவு வரலாற்று நாவல்களின் நம்பகத்தன்மையை வாசிப்பின் நடுவிலேயே குலைத்து விடும். ஆனால் Adichi போன்ற வெகுசில எழுத்தாளர்களால் மட்டுமே அதை இலக்கியமாக்க முடியும். Cultural memoryஐ Literature ஆக மாற்றுவது என்பது எளிதான காரியமில்லை.

இந்த நாவலில் வரும் பாலியல் அத்து மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், மனிதர்கள் தொலைந்து போவது என்பதை இலங்கையுடனோ அல்லது வேறு எந்த உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தேசத்துடனோ நாம் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். நாவலில் அடிக்கடி வரும் ” The World Was Silent When We Died” என்ற வரியும் தான். மரணத்தை விடக் கொடுமையானது தொலைந்து போதல். நம் வாழ்நாள் முழுதும் காத்திருப்பு நிரந்தரம். பெண்கள் குறித்து Adichiயும் Isabel Allendeயும் எழுதுவதில் எத்தனை வித்தியாசங்கள்! Olannaவின் guiltஐ Allendeயின் கதாபாத்திரங்கள் எப்போதும் உணர்வதில்லை. Adichi அவருடைய இருபத்தொன்பதாவது வயதிலேயே இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றான இந்த நூலை எழுதி முடித்துவிட்டார். ஏராளமான வாசகர்களை உலகெங்கிலும் இருந்து இவருக்குப் பெற்றுத் தந்த நாவல். விரைவில் நல்ல மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவர இருக்கின்றது.

One thought on “Half of a Yellow Sun – Chimamanda Ngozi Adichi:

  1. I have this book , started reading but could not continue, I have read the Purple hibiscus and I reviewed it. I watched most of her lectures. Very inspirational woman like many Nigerian woman, most of the Nigerian population are very well educated. This book connects me with my Nigerian friends. Thank you for the review , will help me to read it now.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s