ஆசிரியர் குறிப்பு:

திருவாரூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் ஃபிளாரிடா மாகாணத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர் கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். என் ஜன்னல் வழிப்பார்வையில், பங்களா கொட்டா,வனநாயகன்-மலேசிய நாட்கள், Social media குறித்த இருநூல்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல்.

பெயர் சொல்லாத கதைசொல்லி, காதலித்தவளை மணக்காமல், தாயார் ஏற்பாடு செய்த பெண்ணை மணந்து, பின் அவளையும் பிரிந்து, பத்து வயதுப் பெண் குழந்தையோடு, பிளோரிடாவின் Posh குடியிருப்பில் வசிக்கையில், பக்கத்தில் வசிக்கும் ஜெஸி என்ற அமெரிக்கப் பெண்ணுடன் காதல் அரும்புகிறது. அது மலர்வதற்குள் ஜெஸி காணாமல் போகிறாள். அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே கதை.

ஒரு புனைவில் பறவைகள் இவ்வளவு தூரம் இடம்பெறுவதைத் தமிழில் முதன்முறையாக நான் வாசிக்கிறேன். நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஒன்று, மற்றும் அவளது மாமா இருவரும், Ornithophile ஆக இருப்பதால் பறவைகள் கணிசமான பங்கை இந்த நாவலில் எடுத்துக் கொள்கின்றன. அட்டையில் இருக்கும் நீலநாரை, ஜெஸிக்கான உருவகம் மட்டுமல்ல, கதையின் இறுதியில் முக்கியமானதொரு வேலையைச் செய்யப் போகிறது.

அடுத்ததாக, அமானுஷ்யம் (Paranormal). அமானுஷ்யம் நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. பிரியாவின் மூலமாகச் சொல்லப்படும் விஷயங்கள், தெருவில் நாய்களின் சத்தம், பத்துமடங்கு பெரிய நீலப்பறவை என்று அமானுஷ்யம் கதையில் முக்கிய பங்காற்றுகிறது. அதுபோலவே, Black magic. நம்மை விட அமெரிக்கர்கள் இப்போது அதை அதிகம் நம்புகிறார்கள்.

அமெரிக்க வாழ்க்கை என்பது மட்டுமல்லாது அமெரிக்க மனோபாவம் என்பதையும் பாஸ்கர் இதில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக ஜெஸியுடனான ஓரிரவுக்குப் பிறகு அமெரிக்க மனநிலை அமைதியாக எதிர்கொள்வதையும், இந்திய மனநிலை குற்ற உணர்வுடன் கண்களைச் சந்திக்கத் தவிர்ப்பதையும் சொல்லலாம். அந்த ஒரு இடம் மட்டுமல்ல, அங்கேயே பல காலங்கள் இருந்தவர் என்பதால் அதைத் தெளிவாக நாவலில் கொண்டுவர முடிந்திருக்கிறது.

முதல் ஐந்து அத்தியாயங்கள் ஒரு திரில்லர் நாவலின் தொடக்கத்துடன் வந்திருக்கிறது.
இடையில் காதல்கதையாக மாறலாமா என்று யோசிக்கிறது. Romantic thriller என்பது வேறு Format. Clare Mackintoshவின் பெரும்பாலான நாவல்கள் இந்த ரகம். இரண்டு Timelineகளில் கதை நகர்கிற பொழுது, ஒரு அத்தியாயம் Past romanceக்கும் , அடுத்தது Present தேடல் வேட்டைக்கும் வைத்திருந்தால் நாவலின் வேகம் அதிகரித்திருக்கும். குடியிருப்பாளர்கள் பிரச்சனைகள், கூட்டங்கள், கூப்பர் எல்லாமே என் கருத்தின்படி Extra luggage.

ஆரூர் பாஸ்கர் அவருக்குத் தெரியாத விஷயங்களில் புகுவதில்லை. அதுவே அவருடைய பலமும் கூட. இந்த நாவலின் கதைக்களமும் அவர் பலவருடங்களாக வசிக்கும் .ஃபிளாரிடா. அமெரிக்காவில் நடப்பதால் மட்டுமல்ல, மேற்சொன்ன பல விஷயங்களாலும் இது வித்தியாசமான நாவல். போதை மருந்து, Gun culture, சிறுவர்கள் வயதுக்கு மீறிநடப்பது, கட்டற்ற சுதந்திரம் என்று அமெரிக்கச் சித்திரம் இந்த நாவலில் அழகாக வந்திருக்கிறது. அதற்காகவே ஆரூர் பாஸ்கரைப் பாராட்ட வேண்டும்.

பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s