அவக் – சரவணன் சந்திரன்:
இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை விட, ஆண்பிள்ளைகளே அவர்களுக்கென்று குடும்பம் வந்தால் பெற்றோரை எளிதாகக் கைவிடுவது. நான் பெண் குழந்தை ஒன்றைப் பெறவில்லையே என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெண்கள் ஒரு மாதத்திலேயே என் வீடு, பெற்றோரிடம், முறையாகச் செய்தால் தானே நமக்கு மரியாதை என்பது போல் சொல்வது காலங்காலமாக இருந்து வருவது தான். ஆண்களை விடப் பெண்கள் சுருதிபேதத்தை எப்போதும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். காளியாத்தாளோ இல்லை மாரியாத்தாளோ எப்படியும் கைகொடுப்பாள் என்றிருந்தால் உடுத்தியிருக்கும் கோமணத்திற்கும் ஆபத்து வந்துவிடும்.
வழித்துணை – அஜிதன்:
மீண்டும் அஜிதனிடமிருந்து நல்லதொரு சிறுகதை. சிறுகதை வடிவம் இவரது கைகளுக்குள் கச்சிதமாகச் சிக்கிக் கொண்டது. வாழ்க்கையும், வழித்துணையாக வருபவர்களும் கற்றுத்தரும் பாடத்தை எந்தக் கல்லூரியும் கற்றுத்தர இயலாது. நினைவுகளைச் சுமப்பவர்களை விட்டு இருந்தாலும், இறந்தாலும் யாரும் பிரிவதில்லை. அஜிதனின் கதைகளும், மொழிநடையும் வெள்ளம் இழுத்துச் செல்வது போல் நம்மை கதைக்குள் அமிழ்த்துகின்றன. அஜிதன் கவனத்தில் கொள்ள வேண்டியது, கூட்டுப்பத்திரத்தில் கையெழுத்து போன்றவற்றை ஆய்வு செய்யாமல் எழுதுவது. ஏதேனும் காரணத்திற்காக அக்கா திருநெல்வேலி செல்ல முடியாது இருந்தால், அவர் சென்னை பதிவாளர்களுக்கு முன்னால் பதிய வேண்டிய பத்திரத்தில் கையெழுத்திட்டு, யாருக்கேனும் Special power கொடுத்து என்று பல நடைமுறைகள். எல்லாம் செத்துப் போனாங்க, அம்மா இறக்கும் நேரம் இல்லாமல் போவது என்று எத்தனையோ கனமான விஷயங்கள், கதைகளின் சின்னத் தவறுதல்களைக் கவனிக்க விடாது செய்யும்.
ஆனால் சிறுகதைகளில் அஜிதன் அடையப்போகும் உயரங்களுக்கு Perfection முக்கியம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்ல வேண்டியதாகிறது. Beautiful story.
சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள் – காலத்துகள்:
தன் மனைவி கற்புக்கரசியாகவும் அடுத்தவன் மனைவி தனக்கு மட்டும் இணங்குபவளாக இருக்க வேண்டும் என்ற பெரும்பாலான ஆண்களின் மனநிலை கதையில் தெளிவாக வந்திருக்கிறது. அதை விட முக்கியமானது மனதுக்குள்ளும், கலாவிடமும் விடாது சொல்லும் அந்த Denial.
கடைசிவரையிலும் அந்த Suspenseஐ உடைக்காதிருப்பது நமக்கு சுவாரசியம், அவனுக்குத் தலையுடைப்பு. உண்மையில் இது ஒரு Women”s lib story.
கனவில் நனைந்த மலர் – தமயந்தி:
தமயந்தியின் Potential வேறு. எழுத்தில் மட்டுமே தொடர்ந்திருந்தால் இன்னும் நிறையவே சாதித்திருப்பார். Sex with love and affection என்பது பெண்களுக்கு மிக முக்கியமானது. ஆண்களுக்குப் பொதுவாக அப்படியில்லை. ஆனால் அதுவும் இப்போது மாறிவருகிறது. இந்தக் கதையில் மாதவி விடுதலையாகி வந்தவன் மேல் ஆசிட் அடிப்பது போல் வந்திருந்தால் இன்னும் கூட லாஜிக்கலி சரியாக இருந்திருக்கும். ஹூசைனோ, சிவனோ ஆண்களிலும் அனுசரணையாக இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. Rape victimsக்கு Nightmares வாழ்க்கை முழுவதும் என்ற Pointம் மிகச்சரியே. தொடர்ந்து சிறுகதைகளை எழுதுங்கள்.
குரல்கள் – சுரேஷ்:
முதுமையில் தனிமை தவிர்க்க இயலாதது. நம் குழந்தைகள் நம்முடனேயே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமற்றது.
கதையில் கொஞ்சம் Melodrama தன்மை அதிகமாகி வந்தது போல் எனக்குத் தோன்றுகிறது.
தாம்பத்தியம் – சாரா ஜோசப் – ஆங்கிலத்தில் J. தேவிகா – தமிழில் சசிகலா பாபு:
Feminist writing பெரும்பாலான நேரங்களில் இலக்கியமாவதில்லை. ஏன் எந்த சிந்தாந்தமுமே கதைகளின் மேல் வெளிப்பூச்சாக அமைகையில் அது இலக்கியமாவதில்லை. ஆனால் மீரா, சாரா ஜோசப் போன்றவர்கள் இந்தத் தடையை எளிதாகக் கடக்கிறார்கள். தி.ஜாவின் குறுநாவல் வீடு, டாக்டரின் மனைவிக்கும் இந்தக்கதைப் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்? இருவரின் நிலை ஒன்றே, எதிர்வினை வேறு. அவள் அவ்வளவு அழகாக, தேவதை போல் என்ற விஷயத்தை இரு எழுத்தாளர்களுமே அழகாகக் கையாண்டிருக்கிறார்கள். கிராமத்தில் முன்பெல்லாம் பெண்கள் வெளிப்படையாகவே சொல்வார்கள், ” ஆமா இவனுக்கெல்லாம் கோபம் ஒண்ணு தான் கேடு” என்று. ஏன் ஏன் என்று கதை ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் கேள்வி கதையின் கடைசிவரிகளில் தெளிவடைகிறது. சசிகலா பாபு திறமையான மொழிபெயர்ப்பாளர். இரண்டு மொழிபெயர்ப்புகளைத் தாண்டியும் அந்தப் பெண் மற்றும் ஆணின் தவிப்பு முழுமையாகப் பதிவாகியிருக்கிறது. சாரா ஜோசப்பின் மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து சிறந்த கதைகளை யாரேனும் தமிழுக்குக் கொண்டு வரலாம்.
இரண்டு நண்பர்கள் – மாப்பசான் – பிரஞ்சு மூலத்திலிருந்து தமிழில் சஞ்சீவி ராஜா:
போரின் தொடர்ச்சி உணவுப் பஞ்சம், அதன் தொடர்ச்சி மரணங்கள். இந்தக்கதையில் ஒரு Misadventureல் இருவர் இறப்பதும், இறக்கும் போது அவர்கள் Dignityஐ இழக்காதிருப்பதும் கதையின் முக்கியமான அம்சங்கள். எளிமையான, தெளிவான மொழிபெயர்ப்பு.