Ulitskaya, ரஷ்யாவில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவர். தனக்குச் சரி என்று படுவது குறித்துக் கருத்துகளைத் தெரிவிக்கச் சிறிதும் தயங்காதவர் எண்பது வயதைக் கடந்த Ulitskaya.
அலிஷா Army Generalக்கும் Polish தாய்க்கும் பிறந்தவர். போர் முடியுமுன்பே ஜெனரல் இறந்துவிட, அவளது தாயாரின் ஏராளமான காதல்களும், காதல் தோல்விகளும், அதனால் ஆழ்ந்த மனஅவதிகளும் தொடர்கின்றன. அப்படி ஒரு அவதியில் அவளது தாய், அன்னா கரீனினாவின் முடிவைத் தேர்ந்தெடுக்கிறாள். அப்போது அலிஷாவிற்கு இருபத்தொரு வயது. தன் தாய் போல ஒருநாளும் இருக்கக்கூடாது, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று Draftsman பணியில் அமர்கிறாள். அவளது திறமை, கணினிகள் வந்ததும் முடிவுக்கு வருகின்றன. அத்துடன் பணிஓய்வும் வந்து விடுகிறது. மூப்பில் தனிமையில் அல்லலுற்று இறக்க விரும்பாது, தோழியின் மருத்துவர் சகோதரனிடம் தூக்க மாத்திரைகளுக்கு Prescription கேட்கிறாள். இதில் தான் அலிஷாவின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது.
அலிஷா மட்டுமல்ல, பெரும்பான்மையான ரஷ்யப் பெண்கள் சுதந்திரவிரும்பிகள். ஆனால் திருமணத்திற்குப்பின் Loyal ஆக இருப்பதை விரும்புபவர்கள். அலிஷாவின் பழைய அனுபவங்கள் அவளைத் தனித்து இருக்க வைக்கின்றது. ஆனால் விதியின் கரங்கள் எப்போதுமே வலியவை, நாம் போகும் திசைக்கு எதிர்த்திசையில் நம்மைப் பயணம் செய்ய வைப்பவை. எவ்வளவு முன்கூட்டிய திட்டமிடலும் தோற்றுப் போகும்.
யதார்த்தத்தை விட்டு சற்றும் நகராது சொல்லப்பட்ட, கதை இறுதியில் எதிர்பாராத டிவிஸ்ட் அடங்கிய நல்லதொரு கதை.
https://www.newyorker.com/magazine/2023/04/03/alisa-fiction-lyudmila-ulitskaya