Eva பார்ஸிலோனா, ஸ்பெயினில் பிறந்தவர்.
பத்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர். Spanish இலக்கிய உலகில் பிரபலமானவர். இது இவர் எழுதிய இரண்டாவது நாவல். இவ்வாண்டின் புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

Boulder என்பது பட்டப்பெயர். வாழ்வில் எந்த இலக்கும் இல்லாத, கப்பலில் சமையல் வேலை செய்யும், ஒருபாலின உறவில் ஈடுபடும் Boulder, Samsa என்ற பெண்ணிடம் காதலில் விழுகிறாள். எந்த திட்டமிட்ட வாழ்க்கைக்கும் பழக்கப்படாத Boulder காதலிக்காக, கடலை விட்டு ஒரு அபார்ட்மெண்டில் குடிபுகுகிறாள். ஐந்து வருடங்கள் பாதி காதல் வாழ்க்கையும், பாதி Suffocationஆகவும் கழிந்தபின் Samsa குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாள். இனி எல்லாமே மாறப்போகிறது.

பெண்களுக்கிடையேயான ஒருபாலின உறவில் (Lesbians) , இருவரில் ஒருவர் அப்படியே ஆணின் Roleplayஐ எடுத்துக் கொள்கிறார். இன்று வெளிவரும் Romance novelகளில் கால்பகுதிக்கு மேல் LGBTQ. காதல், Possessiveness, betrayals என்று எல்லாமே ஆண்-பெண் உறவில் நடப்பது போலவே இதிலும் நடக்கும், இருவரும் பெண்கள் என்பதால் சற்று அதிகமாகவே.
ஒரே துணையுடன் பலகாலம் ஈடுபடும் கலவியில் ஒரு Monotonous தன்மை இருப்பது போலவே, இந்த உறவிலும் இருக்கும்.

Three is a crowd. ஒரு ஆண், தன் மனைவி குழந்தை பெற்றதும், அவர்கள் இருவரும் ஒரு Pair ஆகவும், இவன் தனித்துவிடப்பட்டதையும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவனது இந்த அறியாமைக்காக அவன் போனபிறவியில் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். Boulder குழந்தையை வெறுக்கவில்லை, ஆனால் காதலர் இருவரின் நடுவே அது நிரந்தரமாக வந்துவிட்டதாக நினைக்கிறாள். Samsaவின் விலகலும், Boulder இடைவெளியைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யாததும் நாவலில் முக்கியமான விஷயங்கள்.

Lesbianism மற்றும் Motherhoodக்குமான மோதலே இந்த நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம். Eva அடிப்படையில் கவிஞர் என்பது, நாவலில் தெளிவாகத் தெரிகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டே இந்த மொழி இவ்வளவு Lyrically powerful ஆக இருக்குமென்றால் மூலமான ஸ்பானிஸில் எப்படி இருந்திருக்கும். Julia Sanches அழகான மொழிபெயர்ப்பைக் கொடுத்திருக்கிறார்.
உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது எளிது, எப்படி, எப்போது முடித்துக் கொள்வது என்பதே அதில் கடினமான ஒன்றாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s