ஜாடி மலர்கள் – பா. திருச்செந்தாழை:
சிறுகதைகள் ஒரு கதையைச் சொல்லாது, ஒரு நுட்பமான உணர்வைச் சொல்லுகையில், மொழி எவ்வளவு முக்கியமானது என்பது இந்தக் கதையை வாசிக்கையில் தெரிகிறது. Adopted mother உண்மையான மாமியாராக மாறுகையில், அவனால் அசல் மகன் போல் கத்த முடியாது.
கதையின் ஆரம்பம் ஒரு உபாசனையில் தொடங்கி, மகிழ்வில் முடிகிறது. பெண்களால் ஒரே அறையில், அருகருகே அமர்ந்திருந்தாலும், மூடிய கதவின் வெளியே நாம் நிற்கும் உணர்வை லேகாவைப் போலவே வழங்க முடியும். சிறு குழந்தை பகையை மறக்கச் செய்கிறது. பதினாறு வயதுப் பெண்ணின் அறியாமை காமத்தை மறக்கச் செய்கிறது. இறுக்கத்தை விட்டு வெளிவரக் கொஞ்சம் தனிமையும், கவனத்திருப்பலும் வேண்டியதாகிறது. Yet another good story for the writer’s collection. அம்மாவின் உணர்வு கதையின் கடைசியில் இந்தக் கதைக்குத் தேவையில்லாத ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.
கப்பல் – எஸ். சங்கரநாராயணன்:
The biggest risk a person can take is to do nothing. சவடால் பேர்வழிகளால் மட்டுமே அது குறித்த விசனம் சிறிதும் இன்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும். பாஷாங்கராகம் கதையின் கணவன் போல.
கதையின் கடைசியில் ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கிறது.
கதையும் காலமும் – லாவண்யா சுந்தரராஜன்:
Great Indian Novelல் தரூர், மகாபாரதக் கதாபாத்திரங்களை தற்போதைய உலகில் நடமாட விட்டிருப்பார்.லாவண்யாவின் கதையும் காலமும் linked stories. ஒன்று புராணகாலம், மற்றொன்று நிகழ்காலம். பாத்திரங்கள் ஒன்று காலங்கள் வேறு. இம்முறை பெண்ணின் ஒடுக்கப்பட்ட காமம். ஒவ்வொரு முறையும் லாவண்யா Predominantly Modern short story writer என்கின்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
திரிசங்கு – மன்னு பண்டாரி- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
திரிசங்கு கதையின் அம்மா பூமியிலும் கால் பதியாது, வானத்திற்கும் செல்லாது, இடையே நின்று கொண்டிருப்பாள். மகளைத் தான் வளர்ந்த விதத்தில் கட்டுப்பாடுடன் வளர்க்காமல் சுதந்திரமாக விடவேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கையில் பெண்ணைப்பெற்றவளின் கவலை இடையே வந்துவிடும். இப்போதைய இளைஞர்கள், யாரை, எதுவரை அனுமதிக்கலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள், பெரியவர்கள் தான் குழம்பி இருக்கிறார்கள். நல்ல மொழிபெயர்ப்பு.
அவரவர் கைவிடம் – நாஞ்சில்நாடன்:
யார் வேண்டுமானாலும் வாங்கடா என்று வேகமாகச் சிலம்பு சுற்றும் ஒருவர் யார் தெரியுமா? அவர் மனிதர் இல்லை, கதை. நாஞ்சில்நாடனின் இப்போதைய கதைகள். தேன்மழை திரைப்படம் என்று நினைவு, அதில் ஒரு வசனம், ” நானே காலத்தைக் கழிச்சிக்கிட்டு இருக்கேன், என்கிட்ட வந்து வம்பிழுக்கிறான்”. காலத்தைக் கழிப்பவனிடம் யாரால் வம்பிழுக்க முடியும்!
நாஞ்சில்நாடன் மனதளவில் முழுசுதந்திரம் அடைந்து விட்டார். நான் உண்மையில் எண்ணவில்லை, ஆனால் குறைந்தபட்சம் ஆரேழு பேரையேனும் வம்பிழுத்திருப்பார் இந்த சிறுகதையில். முதல் வரியில் இருந்து கடைசி முற்றுப்புள்ளி வரை குஜராத்திப் பெண்ணின் முதுகு போல் கதை வழுக்கிக் கொண்டு செல்கிறது.
https://drive.google.com/file/d/1UfFSh6sAA-MHSdJQMyU8ZsAgO_WVx3XW/view?usp=share_link