எட்வர்ட் அமெரிக்கப் பத்திரிகையாளர். பிரியா பாஸூ என்ற இந்தியப் பெண்ணை மணந்து, பதினோரு வருடங்கள் வாழ்ந்து மணவிலக்குப் பெற்றவர். இந்தியாவில் பணியாற்றியவர். ஐந்து வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றியதும், இந்தியா மீதான காதலும் இந்த நூலை எழுதத் தூண்டியவை என்று கூறியிருக்கிறார்.

மேலை நாட்டினரை எது இந்தியாவை நோக்கி வரவழைக்கிறது? ஆன்மீகமும், ஆன்மாவை நோக்கிய பயணம் செல்லும் விருப்பமும் என்கிறார்கள். வேதங்களும், உபநிஷத்துகளும் அவற்றை அடையும் வழிகள் என்று கருதுகிறார்கள். இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு வெளிநாட்டு நிருபரின், Unsentimental evaluation of Contemporary India இந்த நூல்.

நவீன இந்தியாவின் சிற்பிகளாக காந்தி,.அம்பேத்கர், நேரு ஆகிய மூவரைச் சொல்லலாம். காந்தி கிராமங்களில் இருந்து பொருளாதார வளர்ச்சி ஆரம்பிக்க வேண்டும், நகரங்களில் மக்கள் குவிவது பல வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்றார். அம்பேத்கருக்கு கிராமம் என்றாலே இளமையின் கசப்பான நினைவுகளே மீந்து இருந்தன. நகரம் சார்ந்த வளர்ச்சி அவர் கூறியது. Nehru, the last English man who ruled India இருவர் பாதையிலும் செல்லாது புதிய வழியைத் தேர்ந்தெடுத்தார். பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது எவ்வளவு பெரிய இழப்பாகப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியா பரப்பளவில் தென்கொரியாவை விட 33 மடங்குகள் பெரியது. வடகொரியாவுடனான போருக்குப் பின் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நாட்டின் Per Capita Income மும் இந்தியாவுடையதும் 1947ல் ஒன்றே 50 USD. 2005 நிலவரப்படி தென்கொரியாவின் Per Capita Income 10000USD, அதாவது இந்தியாவை விட பத்து மடங்கு அதிகம். சீனாவின் பரப்பளவு இந்தியாவை விட மூன்றுமடங்கு அதிகம். சீனா தன்னுடைய முதல் முப்பது வருடங்களில் பயங்கரவாதம், புரட்சிகளில் கழித்தது. இருந்தும் பதிமூன்று மடங்கு இந்தியாவை விட அதிகம். மூன்று நாடுகளுக்கும் PPP எடுத்துக் கொண்டாலும் மற்ற இரண்டின் வளர்ச்சி அதிகம். (மக்கள் தொகை கணக்கை இங்கே எடுக்கக்கூடாது).
1991ல் இந்தியா முழித்துக்கொண்டு மாற்றுப்பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது.
மன்மோகன்சிங் ஒரு தேசத்தைக் காப்பாற்றியது, இன்று முற்றிலும் மறக்கப்பட்டு விட்டது.

முதல் அத்தியாயம் பல தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுனர்களை சந்தித்து அவர்களது கருத்துகளைச் சொல்வது. இரண்டாவது கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் சொல்லும், மீன் தண்ணீரை எப்போது குடிக்கிறது என்று சொல்ல முடியாததைப் போலவே, அரசு ஊழியன் திருடுவதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்ற Quoteஉடன் ஆரம்பிக்கிறது. லஞ்ச லாவண்யங்கள், வர்க்க பேதங்கள், காவல்துறைக்குப் புகார் கொடுக்கச் சென்ற பெண் காவல்நிலையத்தில் உள்ள எல்லோராலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாவது போன்ற பல அத்துமீறல்கள் என்று எல்லாமே நாம் பார்த்தது, கேட்டது, படித்தது என்ற போதிலும் வெளிநாட்டவர் சொல்லும் போது அவமானம் மேலிடுகிறது. மக்களுக்குப் பணியாற்ற IAS பதவியைத் துறந்த Aruna Roy, கொச்சின் விமானநிலையக் கனவிற்காக அதிக ஊதியம் தரும் பணிகளை உதறிய Kurien என்று பொதுநலவாதிகள் இல்லாமலில்லை. ஆனால் கயவர்களும் மிக அதிகமாக இருந்தது தான் பிரச்சனையே.

மூன்றாவது அத்தியாயம் லாலு பிரசாத், மாயாவதி போன்றோரின் வளர்ச்சியுடன், தாழ்த்தப்பட்ட இனம் என்று சொல்லப்பட்டவர்களின் வளர்ச்சியையும் விளக்கமாகச் சொல்கிறது. தமிழ்நாட்டின் ஜாதிக் கொடுமைகளைச் சொல்லி முடிக்கிறது.

நான்காவது அத்தியாயம். இந்தியாவில் இந்து தீவிரவாதம். அதன் வெளிப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கமாகச் சொல்கிறது. ( சோனியா காங்கிரஸ் ஆட்சியில் Churchesகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடானுகோடியாக நன்கொடைகள் வழங்கப்பட்டதே அவை எல்லாம் பாலும், ரொட்டியும் வாங்கித் தீர்ந்துவிட்டதா? ஏன் எந்த வெளிநாட்டு பத்திரிகை நிருபரும் அதைப் பேசுவதில்லை?) இந்து தீவிரவாதம் ஆழமாக வேரூன்றி, பல கிளைகள் நீட்டி எதிர்ப்பவர்களின் கழுத்தை நெறிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எந்த மதவெறியும் Civilised Societyக்கு ஏற்புடையதல்ல, இந்து தீவிரவாதம், தங்கஊசி என்றாலும் கண்ணைக் குத்தாது விடாது. கட்டுரையின் முக்கிய அம்சம், ஜெயலலிதா, சங்கராச்சாரியாரை, தீபாவளியன்று கைதுசெய்ய உத்திரவிட்டது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சிக்கல் என்ற அற்ப விஷயத்திற்காக என்ற போதிலும், இது போன்ற தைரியம் கொண்ட அரசியல்வாதியை தமிழ்நாடு அதற்கு முன்னும் சந்தித்ததில்லை, பின்னரும் சந்திக்கவில்லை. அத்வானி ஐந்தடி எம்பிக் குதித்தார், தமிழ்நாட்டில் இந்துக்களின் ஆழ்ந்த மௌனம் அருமையானதொரு எதிர்வினை.

” I watched him peeping behind the curtain, until he disappeared from view, this time or ever” சோனியா ராஜீவின் மரணத்திற்குப்பின் கடைசி சந்திப்பு குறித்துக் கூறியது இது. ஆறாவது அத்தியாயம், காங்கிரஸ் குறித்து. விதி நேருவின் சந்ததிகளையும் விடவில்லை. நேரு அவரது பிரியத்துக்குரிய அன்னை, மனைவி இறந்நபோது அருகிலில்லை. காங்கிரஸ் காந்தி, நேரு Legacyஐ விட்டு மாற்றுவழியில் செல்வதை இந்த அத்தியாயம் விளக்குகிறது. முஷாரப், மன்மோகன் கலந்து கொள்ளும் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு அருண்ஜெட்லிக்கு ஏராளமான VIPகளிடம் இருந்து டிக்கெட்டுக்கு Pressure. அவர் கொடுத்த ஆயிரக்கணக்கான டிக்கட்டுகளில் ஒரே ஒரு டிக்கட்டுக்கு மட்டும் Cheque கொடுக்கப்பட்டது. அதைக் கொடுத்தவர் Gurusharan Kaur, மன்மோகன்சிங்கின் மனைவி.

ஏழாவது அத்தியாயம் தென் ஆசியாவில் பிரிந்துபட்ட முஸ்லீம்கள் குறித்த கட்டுரை. 1857ல் நடந்த கலகத்தில், கடைசி முஸ்லீம் பேரரசர் பகதூர்ஷா சம்பந்தப்பட்டதால், முஸ்லீம்களை குறிவைத்து அழித்தது பிரிட்டிஷ் அரசு. அப்போதும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக ( அவர்கள் போய்விட்டால் பெருவாரி இந்துக்களிடம் மாட்டிக்கொள்ள நேரும்) .எதிராக என்று இரண்டு அணிகள் இருந்தன. 1900ல் இருந்து 1947 வரை ஆங்கிலேயஅரசு முஸ்லீம்கள் காங்கிரஸுடன் சேராதிருக்க எல்லா வழிகளையும் செய்தனர். இரு மதத்தினருக்கிடையே தீராப்பகையை மூட்டிவிட்டு, குறித்த காலத்திற்கு முன்பாக சுதந்திரத்தைக் கொடுத்து நாட்டை விட்டு ஓடினர் என்று எழுதியிருப்பது அவர்களுடைய நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

எட்டாவது அத்தியாயம் இந்தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளும் Super Powers ஆகின்ற போது, மாறும் சமன்பாடுகளைச் சொல்கிறது. ஒன்பதாவது அத்தியாயம் புதிய இந்தியா- பழைய இந்தியாவின் பல்லடுக்கு கலாச்சார, அரசியல், சமூக காரணிகள் குறித்துப் பேசுகிறது.கடைசி அத்தியாயம் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவிற்கான வாய்ப்புகளும், சவால்களும் குறித்துத் பேசுகிறது. Notes, எங்கிருந்து எடுக்கப்பட்டவை என்று குறிப்பிடுகிறது.

தமிழனுக்கு தமிழனல்லாதவன் மேலிருக்கும் பிரேமை போல், இந்தியர்களுக்கு வெள்ளைத்தோல் மேல் ஒரு பிரேமை உண்டு. அது இல்லாவிடில் ஒரு பத்திரிகையாளரால் மன்மோகன், சோனியாவிலிருந்து, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் என்று இவ்வளவு நபர்களைச் சந்தித்திருக்க முடியாது. ஐந்து வருடப் பயணங்கள் மட்டுமல்லாது, பலரைச் சந்தித்து ஏற்படுத்திய தகவுகள், வாசித்துத் தெரிந்து கொண்டவை என்று எல்லாவற்றிலுமிருந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கூடுமானவரை Bias இல்லாது வெளிநாட்டவர் சொல்லும் கருத்துகள் நமக்கு நம்நாடு குறித்த புதிய புரிதலை ஏற்படுத்தக்கூடும். அல்புனைவு எழுதுபவர்கள் இந்தநூலை ஒரு modelஆகக் கொண்டால் தமிழில் அல்புனைவுகள் சிறக்கும். பாராக்கள் அல்புனைவின் தரத்தை அதளபாதாளத்திற்குக் கொண்டு சென்றதை மெல்லக் கயிறுபோட்டு மேலே இழுக்கலாம். William Dalrymble ” கேள்விக்கு இடமின்றி நவீன இந்தியா குறித்து எழுதப்பட்ட சிறந்த புத்தகம் இது” என்கிறார். Amartya Sen, ” வாசிக்க சுவாரசியமானது மட்டுமன்றி சமகால இந்தியாவைப் பற்றிச் சிறந்த நுண்ணோக்கு கொண்ட நூல்” என்கிறார். A good book for lovers of History.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s