சில சிறுகதைகளை ஏன் இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் படிக்கிறோம்? ஏதோ ஒன்றை அதில் தவறவிட்டு விட்டோம் என்று மறுவாசிப்பு செய்கிறோம். பழகிய தடத்தில் நடக்கிறோம். எதுவும் மாறவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் அந்தக் கதையைத் தேடிப் படிக்கிறோம்.

Gravel சிறுகதையைப் பல பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். முதலில் அம்மா. அமைதியான தாம்பத்ய வாழ்க்கையை விட்டு விலகும் Adventure lifeஐ அவள் ஏன் தேர்ந்தெடுத்தாள்? அதிலும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை உடையவள். Stable ஆன வாழ்க்கையை ஏன் நழுவ விட வேண்டும்? ஒருவேளை Neil குறித்த அவள் கணிப்பு, Error in judgement. பழைய வாழ்க்கையின் எந்த சாயலும் புதிய வாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். ஆனால் பழைய வாழ்க்கையில் பெற்ற இரு குழந்தைகள்!

Neil ஒரு Coward. வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சந்தர்ப்பவாதம். அந்த ஓநாய் நிகழ்வில் அவன் கோழைத்தனத்தை வெளியில் சொல்லாது, தாய் ஓநாய்க்கு இரக்கப்படுவதாக நடிக்கிறான். அதே போல் அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதை அவன் அந்த நேரத்தில் சொல்லவில்லை, பலகாலம் கழித்துச் சொல்கிறான். அம்மா மட்டுமல்ல, பெரும்பாலான பெண்கள் புறஅழகும், சந்தர்ப்பவாதப் பேச்சிலும் மயங்கித் தங்களைச் சுட்டுக் கொள்வார்கள்.

அப்பா. அதிக முக்கியத்துவமில்லாத கதாபாத்திரம். Brentஐத் தன்மகன் போல் வளர்க்க அவர் ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும். சாயலினாலா இல்லை அவரது குணாதிசயமே அப்படித்தானா? இந்தக் கதையில் வரும் ஆண்கள் இருவருமே Weak ஆகவும், பெண்கள் எல்லோருமே Strong ஆகவும் இருப்பது தற்செயல் என்று நான் நம்பவில்லை.

Cora. கதையிலே மிகவும் Strong ஆன கதாபாத்திரம். நாயைத் தூக்கிச்சென்று அப்பா வீட்டில் விடுவதன் மூலம் அம்மா- அப்பாவை சேர்க்க நினைக்கிறாள். அம்மாவின் நண்பனிடம் கஞ்சா சிகரெட்டை வாங்கிப் புகைப்பது. Coraவிடம் தான் அம்மாவின் குணாதிசயச்சாயல் அதிகம். Neilஇடம் இருந்து அம்மாவின் கவனத்தைத் தன் பக்கம் திசைதிருப்ப எல்லா வேலைகளும் செய்கிறாள். ஆனால் அந்தக் கடைசி Stunt அவளே எதிர்பாராதது.

கடைசியாக கதைசொல்லி. அது ஆணா அல்லது பெண்ணா? Munro சொல்லவில்லை. ஆனால் அவளது கதை சொல்லும் போக்கில் அது பெண் என்றே நான் நம்புகிறேன். Guilt என்பது சாகும் வரை மறையாதது. யார் வேண்டுமானாலும் சொல்லலாம், கடந்து செல் என்று. அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவளது மனம் ஒரேநிகழ்வை கற்பனைக்கும், நிஜத்திற்கும் நடுவில் முடிச்சுப் போட்டுக் கொள்வது தான் அவளது குற்றஉணர்வை அதிகரித்திருக்கும் என்று நினைக்கிறேன். காலத்தில் பின்னோக்கி சென்று நடந்ததை மாற்ற இல்லை குறைந்தபட்சம் Pause buttonஐ அழுத்த அவள் விரும்புகிறாள். If wishes were horses, beggars would ride. அழிகின்ற நினைவை மீட்டெடுத்து, ஒவ்வொரு முறையும் ஒரு கடந்தகால நிகழ்வை, பல சாத்தியங்களில் சொல்லிப் பார்த்து இவள் ஒரு Closureஐ விரும்புவதில் Munroவின் Mastrr class அடங்கியிருக்கிறது. கடைசிவரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.

கதைசொல்லி வளர்ந்தபிறகு அப்பா
” இருவரும் இப்போது போல் இன்பமாக இருந்திருக்க முடியாது ” என்பதற்கு இவள் கேட்பாள் ” எந்த இருவர்” . Munroவின் கதைகளில் பல உணர்வுகள் மறைந்திருக்கும். உரையாடல்களில் பூடகம் மறைந்திருக்கும். அதனால் தானோ என்னவோ எனக்கு Munroவை வாசிக்கையில் எனக்கு தி.ஜா நினைவுக்கு வருவார். ஒரு முடிவு, ஒரு புதிய உறவு, குடும்பத்தில் எல்லாவற்றையும் மாற்றுகிறது. எதுவுமே முன்போல் இல்லை. கதையைத் தெரிந்து கொள்ள ஒருமுறை வாசித்தால் போதும் Munroவைத் தெரிந்து கொள்ள மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

ஆர்வமுள்ளோர் வாசிப்பதற்காக லதா அருணாச்சலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைப்பு.

சரளைப் படுகை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s