ஆசிரியர் குறிப்பு:
நாகர்கோவிலில் வசிப்பவர். இலக்கியம், சினிமா என்று இரண்டிலும் இயங்குபவர்.
இதுவரை சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் உள்ளிட்ட ஒன்பது நூல்களையும், ஐந்து குறும்படங்களையும் முறையே இலக்கியம், சினிமாவிற்கு அளித்திருக்கிறார். இது இவரது சமீபத்திய குறுநாவல்.
திருவள்ளுவரே தோராயமாக இந்த சாதியாகத் தான் இருக்கும் என்று சொல்லப்படும் அளவிற்கு வரலாற்று திரிபுகள் இங்கே நடப்பதற்குக் காரணம், அறுதித்தரவுகள் என்பதை விட நாம் வாய்மொழிக் கதைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதே. இந்த நாவல் ஒரு வதந்தியாகக் கிளம்பிய தீப்பொறியைக் காட்டுத்தீயாக்க சிலர் முயற்சிப்பது குறித்த கதை.
பிரஞ்சுக்கார டி-லடாயை கோவளபுரப் போரில் சிறையெடுத்தது ஆண்டான் சாதியைச் சேர்ந்த பப்பன் ஆண்டான் என்ற தகவல் பரவ ஆரம்பித்த உடனேயே கிறிஸ்தவர்கள் அந்தோனி என்று ஒருவரைத் தயார் செய்து அவர் தான் உண்மையில் டி-லடாயை கைதுசெய்தது என்று Counter attack கொடுக்கிறார்கள். கடைசியில் என்ன நிகழ்ந்தது என்பதே கதை.
இது போன்ற கதைக்கருவை எடுத்துக் கொண்டு முழுநீள Satireஆக நாவலை எழுதி இருப்பது முக்கியமான விஷயம். தமிழில் இது போன்று வரலாற்றுத்திரிபு Satireகள் குறைவு. குமரித்துறைவி போல, Seriousஆக சித்திரைத் திருவிழாவே மதுரைக்காரர்கள், குமரியில் இருந்து கொண்டுவந்தது என்று வேண்டுமானால் சொல்வோம். சிறிய நாவலில் இரு மதத்தினருக்கிடையே ஏற்படும் பதற்றத்தையும், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், தாதாக்கள், சினிமாக்காரர்கள் எல்லாம் உள்ளே நுழைவதும் எந்த மிகையுமின்றி பகடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று மதங்களையும் சேர்த்து, இன்னும் பல சம்பவங்களைச் சேர்த்து ஒரு நாவல் வடிவில் எழுதியிருக்கலாம் இதை. எனினும் நல்ல முயற்சி. கிருஷ்ணகோபாலிடம் ” நான் நல்லா தமாஷா எழுதுவேன்” என்ற தொனி கொஞ்சம் கூட இல்லை. இந்தக் குறுநாவலின் பலமே அதில் தான் அடங்கி இருக்கிறது.
பிரதிக்கு:
தாலம் வெளியீடு 96008 64207
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 120.