Laurie அமெரிக்க எழுத்தாளர். 1992ல் இறந்து விட்டார். தற்செயலாக இந்தக் கதையைப் பற்றி யாரோ பேச, அவரது மகள் ( Laurie இறக்கும் போது மகளுக்கு எட்டுவயது) வீட்டின் Basementல் அடுக்கிவைத்த பெட்டிகளின் காகிதக்குவியலுக்கு நடுவில் தேடி எடுத்த கதை இந்த வார நியூயார்க்கரில். இதற்கு முன் இந்தக் கதை பிரசுரமாகவில்லை.

மணவினை தாண்டிய உறவுகளுக்குக் கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும். கணவன் சுமார், காதலன் irresistible , தாம்பத்யத்தில் திருப்தி இல்லை, காதலன் adventurous என்பது போல் ஏதாவது காரணம். இங்கே கணவன் Banker, Louis manual worker. கணவனின் உடல்மேல் எப்போதும் நறுமணம். Louis மேல் புகையிலை, வேர்வை கலந்த வாடை. கணவன் Handsome. Louis ordinary looking, bald, உயரம் வேறு இவளை விடக் குறைவு, கிட்டத்தட்ட அப்பாவின் வயது. எதிலுமே Score எடுக்க முடியாதே. இங்கு தான் அவளது Evening song மேலான Attraction வந்து இணைகிறது. யூதப்பெண்ணான, அதிக மத நம்பிக்கை இல்லாத அவளுக்கு கத்தோலிக்கச் சடங்குகள் பற்றி அறியும் ஆர்வம் போன்றதே Louis மேலானதும்.

Affairs வைத்துக் கொள்வது என்று தீர்மானம் செய்தபிறகு நெருங்கிய உறவில், கணவன் அல்லது மனைவியின் நண்பர்களுடன் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? முற்றிலும் அந்நியன் என்றால் குறைந்தபட்சம் குற்றஉணர்வு இருக்காதல்லவா? உண்மை ஆனால் familiarity makes strange bedfellows.

கதையில் இந்த மூன்று இடங்களை முக்கியமாக கவனியுங்கள். கலவி முடித்து நேரடியாக தேவாலயத்திற்கு வரச்சொல்லி அழைக்கிறான் Louis. அவன் கிறிஸ்துவன். அவனைப் பொறுத்தவரை Evening mass மிக முக்கியமானது. இவள் யூதப் பெண்ணாக இருந்தாலும் நேராகத் தேவாலயத்திற்கு வரத் தயங்குகிறாள். அடுத்தது Louis சாப்பிடுவதற்கு முதல்நாள் இரவில் கணவனும், மகளும் சாப்பிட்டு மீந்த உணவை Louisக்குக் கொடுக்க சங்கடப்படுகிறாள். உடலையே கொடுத்த பின் உணவில் என்ன இருக்கின்றது என்றால் பெண்களின் உணர்வை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். கடைசியாக Louis சட்டென்று உறவை முடித்துக் கொள்கிறான். ஆணுக்கு ஆர்வம் குறைந்தபின் Highstake என்பது நினைவுக்கு வரும். இவளுக்கு உறவு முடிந்ததில் பெரிதாக வருத்தம் இல்லை, ஆனால் தான் ஏதோ தவறாகப் பேசியதால்/நடந்ததால் முடிந்துவிட்டது என்று நினைக்கிறாள். பெண்களின் உலகம் தனி.

Laurie அவரது கதைகளை விட சமையல் புத்தகங்களினால் பெரிதும் பிரபலமானவர்.
உணவுக்கும் உறவுக்குமான சம்பந்தத்தை மற்றவர்களை விட நன்கு அறிந்தவர். Laurie ஒரு யூதப்பெண். கதையில் வரும் பெண் போலவே மதத்தில் அதிக நம்பிக்கை இல்லாதவர். இந்தக் கதையை அவர் ஏன் பிரசுரத்திற்குக் கொடுக்கவில்லை? உங்கள் யூகத்திற்கே அதை விட்டுவிடுகிறேன்.

https://www.newyorker.com/magazine/2023/04/17/evensong-fiction-laurie-colwin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s