சினுவா ஆச்சிபி, கூகி வா தியாங்கோ ஆகிய இருவரும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். நோபல் பரிசைப் பெற முற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள். இறந்தவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படுவதில்லை என்பதால் தியாங்கோ மட்டுமே எஞ்சியிருக்கிறார். இவர்கள் இருவருமே மிகச்சிறந்த நாலாசிரியர்கள். ஆப்பிரிக்க இலக்கியத்தை உலக வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்ததில் இருவரின் பங்கும் முக்கியமானது. இருவரையும் எதற்காக இங்கே ஒப்பீடு செய்கிறோம் என்றால் என் நினைவுக்கு எட்டியவரை சிறந்த சிறுகதை என்று இவர்கள் எழுதியதில் வாசித்ததாகக் கவனமில்லை. சிறுகதை என்ற வடிவம் இருவர் கைகளில் இருந்து நழுவியதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னொரு எழுத்தாளரான Chimamanda Adichieஐ எடுத்துக் கொண்டால், நாவல்களில் இருக்கும் அதே Force and power அவரது சிறுகதைகளிலும் இருக்கும். பெண் என்பதால் ( வெளிநாடுகளில் பெருமதிப்பைப் பெற்றவர் இவர்) ஆப்பிரிக்காவிலேயே அவரை மாஸ்டர் எனக் குறிப்பிடத் தயங்குகிறார்கள்.

இத்தொகுப்பின் நான்கு கதைகளை எடுத்துக் கொண்டால் ஆச்சிபி நாவல்களில் வரும், ஆப்பிரிக்கக் கலாச்சாரம், அவர்களது நம்பிக்கைகள், சடங்குகள், ஊழல்கள், பாலின பேதம், இனபேதங்கள் என்று எல்லாமே வருகின்றன. ஆனால் நாவலில் வருவது போல் கலைநேர்த்தி கைகூடவில்லை. மாரத்தான் வீரனை ஆள் குறைகிறது என்று அவசரமாக நூறுமீட்டரில்
சேர்த்தது போல் இருக்கிறது.

வாக்காளர் ( The Voter) கதை, நிறைய தடவைகள் Quote செய்யப்பட்ட கதை. போட்டி இடுபவர்கள், இடைத்தரகர்கள், பொது மக்கள் என்று எல்லாருமே ஊழலைக் குடித்து ஊழலில் குளிக்கிறார்கள். இதில் கடைசிநேர மனசாட்சியை ஆச்சிபி எடுத்துக் காட்ட விரும்புவது எடுபடாது போகிறது.
‘அவ்வாறெனில் அது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது’ இதே Subjectஐ வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது. அதில் System அதனுடைய Checkpointஐ வைக்கிறது.

யாகமுட்டை கதையில் இந்தியச் சாயல் ஏராளமாக இருக்கின்றது. முட்டையை தோஷம் போக தெருவில் வைப்பது, அம்மை வந்த வீடுகளின் வாசலில் அடையாளம் இடுவது, கழிப்பைத் தெரியாமல் மிதித்தவனின் மனக்கலக்கம் என்று பலவற்றில் இந்தியத்தனம் தெரிகிறது. மற்றொருகதையான அகுஎகே பெயரை மாற்றினால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடிய கதையே.

ஆங்கிலத்தில் படிக்க இயலாதவர்களுக்கு ஆச்சிபி சிறுகதைகள் குறித்த அறிமுகம் இந்த நூல். அவரது புகழ்பெற்ற நாவல் Thinga Fall Apart, சிதைவுகள் என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பு மிக எளிதாகத் தமிழ் கதைகளை வாசிக்கும் உணர்வை அளிக்கிறது.

பிரதிக்கு:
Amazon.in
முதல்பதிப்பு ஏப்ரல் 2023
விலை ரூ. 49.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s