Greer ‘ The Wife Between Us’ என்ற நாவலில் இணையாசிரியராக Sarah Pekkanenஉடன் ஆரம்பித்து நான்கு நாவல்களை இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். பத்திரிகையியலில் முதுகலைப்பட்டம் பெற்று, இருபது வருடங்களுக்கு மேல் புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் எடிட்டராகப் பணியாற்றியவர்.

Blair ஐம்பதுக்கு அருகில் இருப்பவர். சில வருடங்களுக்கு முன் ஒரே மகளை, Drug overdoseக்குப் பறிகொடுத்ததுடன், .இலேசாக ஒட்டிக் கொண்டிருந்த மணவாழ்க்கையும் முடிவுக்கு வருகிறது. தனிமையும், ,துக்கமும் நாளுக்கு நாள் அதிகமாக, தற்செயலாக அறிமுகமாகும் மகள் வயதுடைய பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறார். ஆனால் இருவருமே ஒரு இரகசியத்தை அடுத்தவரிடம் சொல்லாது மறைத்து வைத்திருக்கிறார்கள்.

இரண்டு பேருடைய கோணம் எனும்போது இரண்டு கதைசொல்லிகள் Effective ஆன யுத்தி. சிறுகதையில் அதை சரியாகப் பொருத்தி இருக்கிறார் Greer. மகள் இறந்த சோகத்தை, அம்மாவின் Narrativeல் வெகுஆழமாகச் சொல்லி இருக்கிறார் Greer. Suspense கதை என்பதைத் தாண்டி அந்த சோகம் நெஞ்சில் நிலைக்கிறது. அமெரிக்காவில் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கப்பட்டு செல்லமாக வளர்க்கப்படும் டீன்ஏஜ் பெண்கள் too fragile.
இரண்டாவது பகுதியில் கதையை மற்றொரு முனையில் இருந்து பார்க்கிறோம். சிறிய கதை என்பதனால் மட்டுமல்ல மொழிநடையும் சேர்த்து நம்மை விரைவாகப் படிக்க வைத்துவிடும்.

முதல் நாவலில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜோடி Greer& Sarah. வேறு வேறு நகரங்களில் வசித்தாலும் இருவரும் நெருங்கிய தோழிகள். இவ்வருடத்தில் இருவருமே தனித்தனியாக முதல்நாவலுடன் வருகிறார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நாவல்கள் தர வேண்டுமென்பதே பலரது விருப்பம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s