Condeவிற்கு 86 வயது. கண்பார்வை போய் விட்டது. இந்த நாவலே அவர் Dictate செய்ய
அவரது கணவர் எழுதியது. புக்கர் நெடும்பட்டியலுக்கு வருவதற்கு முன்பே இதுவே என் கடைசி நாவல் என்று கூறி விட்டார். பிரான்ஸில் பெருமதிப்பு பெற்ற எழுத்தாளரான இவரை வெளியில் அதிகம் தெரியவில்லை. இவரது தாய் தீவிர கிறிஸ்தவர், இவரது தந்தை தீவிர நாத்திகர். இந்தக் குடும்பப் பின்னணியில் இவர் இந்த நாவலை எழுதியுள்ளார். இதே பின்னணியில் வந்த நூல்களை எழுதியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், Jose Saramago மற்றும் J. M. Coetzee.
மாயா என்ற பதினேழுவயதுப் பெண், ஈஸ்டர் ஞாயிரன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை தன்னை தெய்வாம்சம் கொண்டவன் என்று கூறிக் கொண்டவர். அவள் குழந்தையை வயிற்றில் வைத்திருக்கும் பொழுது, அடிக்கடி ஒரு குரல், இந்தக் குழந்தை கடவுளின் குழந்தை, உலகத்தை மாற்றப் போகிறான் என்று சொல்கிறது. ஆனால் அவளால் திருமணத்திற்கு முன் பெற்ற குழந்தையை வைத்துக் கொள்ள முடியாது. அருகிலிருக்கும் பணக்காரக் குடும்பத்தின் தொழுவத்தில் அந்தக் குழந்தையை விட்டுப் போய்விடுகிறாள். குழந்தை இல்லாத பணக்காரத் தம்பதியர் கடவுள் பரிசாக அளித்த குழந்தை என Pascal என்ற பெயரிட்டு வளர்க்கிறார்கள். அவன் உண்மையில் கடவுளின் குழந்தையா என்பதே நாவல்.
நாவல் ஒரே நேரத்தில் இரண்டுதளங்களில் செல்கிறது. முதலாவது Pascalன் தொடர் பயணங்களும், அவன் செல்லுமிடம் எல்லாம் பிரச்சனைகள் உருவாகுவதும், எந்த உறவையும் அவனால் கடைசிவரை வைத்துக் கொள்ள முடியாது போவதும். அவன் செய்தவை அற்புதங்களா இல்லை தற்செயல்களா? இரண்டாவது, Conolial and Post colonial west indies மீதான விமர்சனம்.
உலகம் எப்போதும் Messiahவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையையும், Symbolsகளையும் கலந்து ஒரு Modern Fableக்கு முயன்றிருக்கிறார் Conde. ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பின்னும் வரிகளில் Lyrical தன்மை எஞ்சியிருக்கிறது. ஒரு மெல்லிய நகைச்சுவை நாவலெங்கும் கலந்திருக்கிறது. நல்லதொரு மொழிபெயர்ப்பு. Gospel என்ற வார்த்தை வந்தாலே வெளிநாட்டில் விற்பனை கூடிவிடும். Conde இரண்டாவது முறையாக புக்கர் நெடும்பட்டியலுக்குள் வருகிறார். கடவுள் குறித்தும், பைபிள் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாததால் இந்த நூல் எனது Favorite shortlistல் வராது.