Rachel ஆங்கிலேய நாவலாசிரியர். பதினோரு நாவல்கள், நான்கு அல்புனைவுகளை இது வரை எழுதியுள்ளார்.
புக்கர் நெடும்பட்டியலில் இருமுறை இடம் பெற்றவர் Rachel.
கதைகளில்லாத கதைகளை எழுதுபவர் என்று சா.கந்தசாமியைச் சொல்வார்கள். ஆனால் Rachelன் இந்தக் கதையில் கோர்வையான சம்பவங்கள் கூட இல்லை. ஒரு புகழ்பெற்ற ஓவியன் & அவனது மனைவி, கதைசொல்லியான பெண் ஓவியர் இவர்களைப் பற்றிய கதை இது. Womanhood மற்றும் Art இரண்டும் இந்தக் கதையின் Main themes.
Georg Baselitz என்ற ஜெர்மானிய ஓவியரின் படைப்புகள் இவருக்கு ஏற்படுத்திய பாதிப்பையும், Paris நகரில் Rachel அடையாளம் தெரியாத பெண்ணால் தெருவில் தாக்கப்பட்டதன் பாதிப்பையும் இணைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே எழுத்தாளர்கள் எங்காவது ஒளிந்திருப்பார்கள், அவை Autofictionஆக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, அதே போல் Viaual Artல் Artistன் குணாதிசயம் எங்கிருக்கிறது என்பதை அலசும் முயற்சியே இந்தக்கதை. கதைகளில் எழுதுபவரின் பாலினத்தின் தாக்கம் இருப்பது போல், Visual artல் கூட ஒரு ஆணின் படைப்புக்கும், பெண்ணின் படைப்புக்கும் வித்தியாசமிருக்கிறதா என்பதையும் ஆராய்கிறது.
Rachelன் Second Plaxe என்ற 2021 புக்கர் பட்டியல் நாவல், D H Lawrence தன்னை வரவேற்று இடம்கொடுத்த ஒருவருக்குத் தலைவலியாக மாறிய கதையை, எழுத்தாளர் இடத்தில் ஓவியர் என்று மாற்றி எழுதப்பட்ட நாவல். ஓவியங்களின் பாதிப்பு இந்தக் கதையில் வருவது போலவே அந்த நாவலிலும் இருக்கும். இச் சிறுகதையை இரண்டு முறையாவது வாசிக்க வேண்டியிருக்கும். கதையில் நேரடியாகச் சொல்லாமல் ஒளிந்திருக்கும் விஷயம், ஒரு ஆண் சித்திரம் வரைந்தால் அவன் ஓவியன், ஒரு பெண் ஓவியம் வரைந்தால் அவள் பெண் மற்றும் ஓவியர் அல்லது பெண்ஓவியர். இந்த Mythஐ Break செய்யும் முயற்சியே இந்தக்கதை என்று சொல்லலாம்.
https://www.newyorker.com/magazine/2023/04/24/the-stuntman-fiction-rachel-cusk