வெள்ளவத்தையில் தங்குவதில் வசதி என்னவென்றால், தமிழர் பெரும்பான்மை பகுதி என்பது மட்டுமல்ல தமிழ் உணவுகள் எல்லாமே கிடைக்கிறது. இரவு ஒன்பதுக்கு என்ன தோசை வேண்டுமென்று கேட்டுக் கொடுக்கிறார்கள். இன்னொரு நல்ல விஷயம், நம் ஆட்கள் சிக்கனமாக, சுட்ட எண்ணெயை வீணாக்க வேண்டாம் என்று தோசைக்கு விடுவது போல் செய்வதில்லை, அசல் நெய்யை விடுகிறார்கள்.

கொழும்பு முகத்துவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு கோயில். பத்மாவதித் தாயாரின் முகம் அவ்வளவு திருத்தமாக இருக்கிறது. உன்னை எனக்குத் தெரியும் என்பது போல் சின்னதாய் புன்னகை. அபிஷேகம் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 20000 மட்டும் என்று போர்டு எழுதிப் போட்டிருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் சந்திர சூரியர்கள் சலனமின்றி இந்த போர்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நூறடி கடந்தால் பழமையான காளிகோயில். சிங்களவர்கள் தான் அதிகம் நேர்த்திக்கடனுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மசூதிகளில் மந்திரிப்பதற்கு இந்துக்களே அதிகம் வருவார்கள். Slave Islandல் Gangarama temple நூற்றைம்பது வருட புத்தவிஹார். இப்போது மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் தலையை சாய்த்துப் பார்த்தால் புத்தர் ஒரு கோணத்தில் விஷ்ணு போலிருக்கிறார். சிங்களக் குடும்பங்கள் இரண்டு நாங்கள் போயிருந்த போது வந்திருந்தன. அநேகமாகத் திருமணம் உறுதிசெய்த பிறகு வருகிறார்கள் போலிருக்கிறது. அம்மாவும், பெண்ணும் முழுக்கவே சிங்களபாணி உடை அணிந்திருந்தார்கள். பெண்ணுக்கு முழு
Cleavage தெரியும் உடை. அந்தப் பெண், மாப்பிள்ளை வீட்டாரை அவர்கள் காரில் அனுப்பிவிட்டு, அப்பா, அம்மாவுடன் மற்றொரு காரில் கிளம்பிப் போனது. நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகள் இருந்தும் விஹார் வெறிச்சோடிப் போனது.

அதனருகேயே Shemamalike lake இருக்கிறது. தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட Emerald, Jade புத்தர் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. Courtyard Marriott பிரம்மாண்டமாக ஏரிக்கரையில். நேற்று 100% Occupancy. சற்று தொலைவு நடந்து வந்தால், ஒருவர் குழந்தைக்கு உணவிட வேண்டும், ஐநூறு கிராம் அரிசி வாங்கித்தர முடியுமா என்று கேட்டார். இருவேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக?

Red Mosque, Independence square., Arcade Independence, Gal Palliya, Viharamahadevi Park எல்லாம் பார்த்துவிட்டு,. புது பார்லிமென்ட் கட்டிடத்திற்குப் போனால் ஏரியின் நடுவில் கட்டி வைத்திருக்கிறார்கள். வெயில் தாளாது Sweet Lime Juice குடிக்கச் சென்றால் அந்தப் பெண்ணுக்கு சிங்களத்தைத் தவிர வேறு மொழி தெரியவில்லை. புத்தருக்குப் பதில் இயேசு படம் இருந்தது. பெயர் என்ன என்று கேட்டால் கொஞ்சம் யோசித்து ப்ளோரிடா என்றது. எங்கெங்கே வறுமை, வேலையின்மை, பிரிவினைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் திருச்சபை கழுகு உட்கார்ந்திருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s